உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழியர் டிஸ்மிஸ் உத்தரவு ரத்து; இறந்து 23 ஆண்டுக்கு பிறகு உத்தரவு: குடும்பத்தினர் நெகிழ்ச்சி!

ஊழியர் டிஸ்மிஸ் உத்தரவு ரத்து; இறந்து 23 ஆண்டுக்கு பிறகு உத்தரவு: குடும்பத்தினர் நெகிழ்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட உத்தரவை, அவர் இறந்து 23 ஆண்டுகள் கழித்து ரத்து செய்தது டில்லி ஐகோர்ட். இந்திய உணவு கழகத்தில் அதிகாரியாக ராம் நரேஷ் டில்லியில் பணியாற்றினார். மத்திய பிரதேசம் மற்றும் தமிழகத்திற்கு தனது நிதி ஆதாயத்திற்காக, தரமற்ற அரிசியை ஏற்றுமதி செய்ததாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர் தொழில்நுட்ப உதவியாளருடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, 1998ம் ஆண்டு, இந்திய உணவு கழகத்தின் உதவி மேலாளர் பதவியில் இருந்து நரேஷ் நீக்கப்பட்டார். 2001ம் ஆண்டு தனது 53 வயதில் நரேஷ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

23 வருடங்கள்!

ஆனால் அவரது குடும்பத்தினர், டில்லி ஐகோர்ட் மற்றும் மேல்முறையீட்டு ஆணையத்தை இரண்டு முறை அணுகினர். 'நரேஷ் ஊழல் செய்யவில்லை, அவரது பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. துறை ரீதியாக நடந்த தவறுகளை டில்லி ஐகோர்ட் கண்டுபிடித்தது. இதனால், கடந்த அக்.,01ம் தேதி நரேஷின் பணி நீக்கத்தை டில்லி ஐகோர்ட் நீதிபதிகள் ரத்து செய்தனர். ராம் நரேஷ் பணி நீக்கத்தை அவர் உயிரிழந்து 23 வருடங்களுக்கு பிறகு, டில்லி ஐகோர்ட் ரத்து செய்தது.

மனைவி உருக்கம்

இந்த தீர்ப்பு குறித்து, நரேஷ் மனைவி குஷி கூறியதாவது: இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை இறுதியாக வெளிவந்துள்ளது. என் கணவர் நிரபராதி என்று முன்பே எனக்கு தெரியும். எங்கள் மீது ஒரு கறை நீக்கப்பட்டது. என் கணவர் எங்கிருந்தாலும், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு பெரிய மோசடி செய்து தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார் என்று மக்கள் நினைப்பதை என் கணவர் ஒருபோதும் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

xxxx
அக் 06, 2024 21:24

விரைவான தீர்ப்பை வரவேற்கவேண்டும் மௌன அஞ்சலியுடன் .....


என்றும் இந்தியன்
அக் 06, 2024 19:11

பேஷ் பேஷ் பேஷ் இது தான் இந்திய அநீதிமன்றம். இந்திய நீதிபதி மிகமிக பக்தி நிறைந்தவர் அவர் இறந்த பின் சொர்க்கத்திற்கு சென்றார். அவர் இந்தியாவில் செய்த நல்ல புண்ணியத்தை வைத்து கடவுள் அவருக்கு பெண்கள் உடல் நல ஆய்வாளராக நியமித்தார். அவர் உடனே கொண்டு வந்த ஒரு பெண்கள் விதிமுறை இது தான் "பெண்கள் கர்பக்காலம் 10 மதத்திலிருந்து 28 வருட வரை கரு வயிற்றில் இருக்கும்" அப்படித்தானே இந்த இந்திய உயர் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வருகின்றது.


Ms Mahadevan Mahadevan
அக் 06, 2024 19:07

இப்படியான நீதி பரிபாலன முறை மாற்றப்படவேண்டும். இது மாதிரி தாமதம் அரசியல்வாதிகளுக்கு தான் சாதகமாக அமைந்தது உள்ளது


D.Ambujavalli
அக் 06, 2024 18:42

அவரைப் பணிநீக்கம் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி அந்த நிலையிலேயே மரணமடையும் அளவு செய்த நிறுவன மேலாண்மைக்கு என்ன தண்டனை, குடும்பத்துக்கு என்ன விதமாக இழப்பீடு கொடுக்கப்பட்டது? யாருக்குத் தெரியும்? இந்தப் பணி நீக்கத்தால் ஒருவேளை நிச்சயம் ஆயிருந்த அவரது மகள் / மகன் திருமணம் நின்று பிரச்னைகளும் ஏற்பட்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் கோர்ட் என்ன நிவாரணம் அறிவித்திருக்கிறது ?


rama adhavan
அக் 06, 2024 17:56

இது விசாரணை அதிகாரி தவறு. அதிகாரத்தில் இருப்பவர்களின் ஒரு நாள் தவறால் நல்லவர் துயரப்படுகின்றனர். வக்கீல்கள் பிழைகின்றனர். நீதி நசுக்கப் படுகிறது.


narayanansagmailcom
அக் 06, 2024 17:56

என்ன வேகமாக விரைவாக விவேகமாக நம் நாட்டில் நீதிபதிகள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் வேலை செய்கியர்கள். உண்மையில் எப்படிப்பட்ட வழக்குகளும் பதிவு நாளில் இருந்து இரண்டு வருடங்களுக்குள் முடித்து சம்பந்த பட்ட மக்கள் தீர்ப்பு கிடைக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அந்த வழக்கு இரண்டு வருடங்களுக்கு ள் முடியவில்லை என்றால் அதை கையாலும் ஊழியர்கள் அனைவரும் வேலையிலிருந்து ஒரு வருட காலம் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். அப்போது தான் ஏழை எளிய மக்கள் பயன் அடைவார்கள். சம்பந்த பட்டவர் இறந்த பின் தீர்ப்பு வழங்கி ஒரு பயனும் இல்லை.


Dharmavaan
அக் 06, 2024 15:29

இது போன்ற நீதிக்கு கோர்ட் வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும்


Lion Drsekar
அக் 06, 2024 14:49

பாராட்டுக்கள், இதுபோன்று பலர் தினம் இனம் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர், அதில் ஒரு தலைமை ஆசிரியர் தனது நேர்மையினால் பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார், , உடல்நலன் பாதிக்கப்பட்டு கைகால்கள் செயலாற்ற முடியாமல் மனைவி நகைகளை விற்று காப்பாற்ற முயன்று அவரும் இறந்து விட்டார் , இவருக்கும் உடல்நலன் மிகவும் மோசமான நிலையில் நடக்க முடியாத ஒரு நிலையில் வேறு வழி இன்றி கவனிக்கவேண்டிய இடத்தில கவனித்து இப்போது பென்சன் பெற்று வருகிறார், மேலும் ஒருவர் பங்க்கில் மானேஜராக இருந்தார் யாரோ செய்த தவறுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க வந்தவர்கள் வியாபாரம் பேச மறுத்த இவர் பதவியை இழந்து 70 வயது வரை பெறவேண்டிய பென்சன் , வரவேண்டிய பணம் எதுவும் இல்லாமல் சமீபத்தில் இறந்தே போனார், இப்படி இனம் பலர் துங்கங்களுக்கு ஆளாகிக்கொண்டு வருகின்றனர், இவர்களையும் நீதிமன்றம் தானாக முன்வந்து காப்பாற்றினால் மட்டுமே விடிவு பிறக்கும், வந்தே மாதரம்


Raj
அக் 06, 2024 14:38

இவர் ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபிக்க 23 வருடங்கள். அவரும் இறந்து விட்டார் மனவருத்தத்துடன். வழக்கு எவ்வளவு விரைவாக முடிக்கப்பட்டது. இதுபோல வழக்கு இழுத்தடிக்கப்பட்டு எத்தனை நிரபராதிகள் மரணப்பட்டு விட்டார்களோ வெட்கக்கேடு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை