லால்பாக் பூங்காவில் கட்டணம் அதிகரிப்பு
பெங்களூரு; லால்பாக் பூங்காவின் நுழைவு கட்டணத்தை உயர்த்தி, தோட்டக்கலைத் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.பெங்களூரின் லால்பாக் பூங்கா, வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். சுற்றுலா பயணியர் விரும்பும் சுற்றுலா தலங்களில், லால்பாக் பூங்காவும் ஒன்றாகும். வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர், லால்பாக் பூங்காவை பார்க்க மறப்பதில்லை.இதற்கு முன் லால்பாக் பூங்காவில், 6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு, 10 ரூபாயும், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 30 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது சிறார்களுக்கு 20 ரூபாயாகவும், பெரியவர்களுக்கு 50 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் இருந்து, புதிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.