உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த பெண் டாக்டர்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த பெண் டாக்டர்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

புதுடில்லி: ஹரியானாவின் பரிதாபாத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான பெண் டாக்டர் ஷாகீன் ஷாகித், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த தகவல் அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் அந்த அமைப்பை தலைமை ஏற்று நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒயிட் காலர்

கடந்த அக்., 19ம் தேதி காஷ்மீரின் பன்போரா,நவ்காம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் மற்றும் நம் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு போஸ்டர்களை ஒட்டியிருந்தது. கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், 'ஒயிட் காலர்' பயங்கரவாத முறைக்கு பயங்கரவாதிகள் மாறியிருக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் முஸாமில் கனாயே என்ற முஸாயிப் என்பவனை ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து 2,900 வெடிமருந்து மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். அவனுடன் தொடர்பில் இருந்த அல் பலா பல்கலையில் விரிவுரையாளராக பணியாற்றிய ஷகீல் மற்றும் பெண் டாக்டர் ஷாகீன் ஷாகித் என்பவளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் பெண் டாக்டர் ஷாகீன் ஷாகித் யார் என்பது குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் லால் பாக் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகீன் ஷாகித். இவரது கணவர் யூசுப் அசார். இவர் இந்திய விமானம் ஆப்கனின் காந்தகருக்கு கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்பு உள்ளதும், கடந்த மே மாதம் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்பு

பரிதாபாத்தில் கைது செய்யப்பட்டதும் ஷாகீன் ஷாகித் காரில் இருந்து துப்பாக்கி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவரும் ஹரியானாவில் உள்ள அல் பலா பல்கலையில் பணியாற்றி வந்துள்ளார். காஷ்மீர் டாக்டர் முஸாமில் கனாயேவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஷாகீன் ஷாகித்தின் மாருது சுசுகி சுவிப்ட் காரில் தான் துப்பாக்கிகள், பிஸ்டல், வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவரிடம் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகே அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

பயங்கரவாத அமைப்புடன் உள்ள தொடர்பு

ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது பாகிஸ்தானில் வேரூன்றி இருக்கிறது.இந்த அமைப்பு சமீபத்தில் பெண்களையும் இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது.இதற்காக, 'ஆன்லைன்' மூலம் பயங்கரவாத பாடம் படிக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் சகோதரிகள் சாடியா அசார் மற்றும் சமைரா அசார் ஆன்லைன் வகுப்புகளை தினசரி எடுக்க உள்ளனர். பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட 'ஜமாத் உல் - முமினாத்' பயங்கரவாத அமைப்பில் மூளை சலவை செய்து பெண்களை சேர்க்க இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த 'ஜமாத் உல் - முமினாத்' பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஷாகீன் ஷாகித் ஈடுபட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்பின் இந்தியப் பிரிவு தலைவராக ஷாகீன் ஷாகித் செயல்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த தகவல்களை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை

இந்நிலையில் லக்னோவில் வசிக்கும் ஷாகீன் ஷாகித்தின் தந்தை மற்றும் அவரது உறவினர் வீடுகளில் உளவுத்துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததுடன், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Naga Subramanian
நவ 11, 2025 22:12

இவை அனைத்தும் பாகிஸ்தானை நோக்கியே செல்லும் போலவே தெரிகிறது. அசீம் முநீர் இவ்வளவு கேவலமானவனா? அவனுக்கு கூடிய விரைவில் பாயாசத்தை வைத்தால்தான் அவர்கள் அடங்குவார்கள். அது போன்ற நல்லது நடந்தேற கடவுளை பிரார்த்திப்போம்.


Raghavan
நவ 11, 2025 21:25

எப்போது தனிநாடு கேட்டு சென்றார்களோ அப்போதே இங்குள்ளவர்களை எல்லாம் அங்கே அனுப்பியிருக்கவேண்டும். சர்தார் படேல் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் இந்நேரம் இவர்கள் துண்டை காணோம் துணியை காணோம் என்று அங்கே போயிருப்பார்கள்.


R. SUKUMAR CHEZHIAN
நவ 11, 2025 21:23

இவள் பயங்கரவாதம் செய்வதற்கு பதில் விபசாரம் செய்யலாம். இந்த கீழ்த்தரமான மூன்றாம்தர பயங்கரவாத கும்பல்களை பாத்தாலே அருவெறுப்பாக உள்ளது வாந்தி வருகிறது.


ராம்
நவ 11, 2025 21:15

RAHIM இப்ப என்ன கருத்து போடுவார் இதற்கு…


நிக்கோல்தாம்சன்
நவ 11, 2025 21:02

ஒருபக்கம் முதல்வரின் வீட்டு மருமகள் வரை போதைப்பொருள் விற்பவன் நெருங்குகிறான் , மற்றொருபுறம் கூட்டாக சேர்ந்து வோட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறோம் என்று நெருங்குகிறார்கள் . இடையில் கிருஸ்துவர்கள் எங்கே இந்துக்களுடன் சேர்ந்து கொண்டுவிடுவார்களோ என்று பிரித்தாண்டு கொண்டுள்ளார்கள் , என்ன ஒரு கிரிமினல் புத்தி . இதனை நல்லவழிக்கு பயன்படுத்தினால் எவ்வளவு நாடுகள் முன்னேறியிருக்கும் . ஆனால்


S.L.Narasimman
நவ 11, 2025 20:14

பெண்ணும் தீவிரவாதியாக மாறுகிறாள் என்றால் மத்திய அரசு இனி பாரபட்சம் பாராது யாருக்கும் பயப்படமால் கடுமையான சட்டங்களுடன் அடக்கி ஒடுக்கவேண்டிய நேரம் வந்து விட்டது.


மதன்
நவ 11, 2025 19:19

Doctor என்ற பெயரில் எத்தனை கொலைகள் செய்து இருக்கிறாளோ.


Rathna
நவ 11, 2025 19:12

பயங்கரவாதி மட்டும் அல்ல. டாக்டரும் கூட. தீவிரவாதம் மட்டுமே முதல் தொழில் ஜெய்ஷ் முஹம்மது தீவிரவாத இயக்கத்தில் தலைவன் பாகிஸ்தானி மசூத் அசர் சகோதரியால் தீவிரவாத பயிற்சி பெற்ற நபர் இந்த பெண் டாக்டர்.


Raman
நவ 11, 2025 19:10

Suspect groups must be monitored 24 x 7..needless to say we all know where these criminals come from. constant vigilance and survalliance must..never support and believe also pseudo secular gangs, groups as well..your children future depends on how true we are committed to this country. Jai Hind


Thravisham
நவ 11, 2025 19:02

பாரதமே இனியும் நீ ஏமாந்த சோணகிரியாக இருக்காதே, இனி உன் பாதை இஸ்ரேல் பாதை, சிங்க பாதை