மேலும் செய்திகள்
வங்கதேசம் போல மாறணுமா?
7 minutes ago
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஐ.டி., நிறுவன பெண் மேலாளரை, ஓடும் காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானின் உதய்பூரில் தனியார் ஐ.டி., நிறுவனத்தின் சி.இ.ஓ., எனப்படும் தலைமை செயல் அதிகாரியான ஜிதேஷ் சிசோடியா தன் பிறந்த நாளையொட்டி விருந்தளித்தார். இதில், அந்த நிறுவனத்தின் பெண் மேலாளர் உட்பட பலர் பங்கேற்றனர். மதுபான விருந்து நள்ளிரவு வரை நீண்டது. அப்போது, பெண் மேலாளரை வீட்டில் இறக்கிவிடுவதாக அந்நிறுவனத்தின் மற்றொரு பெண் உயரதிகாரி கூறினார். இதையடுத்து பெண் மேலாளர் காரில் ஏறினார். அந்த காரில், பெண் உயரதிகாரியின் கணவர் கவுரவ் சிரோஹி மற்றும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜிதேஷ் சிசோடியா ஆகியோரும் இருந்தனர். மயக்க நிலையில் இருந்த பெண் மேலாளரை, ஜிதேஷ் சிசோடியா மற்றும் கவுரவ் சிரோஹி ஆகியோர் ஓடும் காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தபின், வீட்டில் இறக்கிவிட்டுள்ளனர். மறுநாள் மயக்கம் தெளிந்தபின், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்த அப்பெண் மேலாளர், போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், தன்னை காரில் அழைத்து சென்றபோது வழியில் சிகரெட் போன்ற ஒரு பொருளை அளித்தனர். அதை பயன்படுத்தியபின் தான் மயக்கமடைந்ததாகவும், அதன்பின் அவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் ஐ.டி., நிறுவன சி.இ.ஓ., ஜிதேஷ் சிசோடியா, அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உயரதிகாரி, அவரது கணவர் கவுரவ் சிரோஹி ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 minutes ago