உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் நக்சல் சுட்டுக்கொலை

ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் நக்சல் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சுக்மா: சத்தீஸ்கரில் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு, தேடப்பட்ட பெண் நக்சல், என்கவுன்டரில் கொல்லப்பட்டார். சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள குப்டி, பெரம்பரா இடையே வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுக்மா மாவட் ட ரிசர்வ் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் துப்பாக்கியால் போலீசார் மீது சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் புஷ்கி நுப்பான், 35, என்ற பெண் நக்சல் கொல்லப்பட்டார். அவரது உடலை மீட்ட போலீசார், அங்கிருந்து துப்பாக்கி மற்றும் பெருமளவிலான வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து சுக்மா போலீஸ் எஸ்.பி., கிரன் சவ்ஹான் கூறுகையில், ''போலீசார் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்ட பெண் நக்சல் புஷ்கி நுப்பான், மலங்கிர் ஏரியா கமிட்டி நக்சல் அமைப்பு உறுப்பினர் என தெரியவந்துள்ளது. ''இவர் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது தலைக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்து தேடப்பட்ட நிலையில், என் கவுன்டரில் கொல்லப்பட்டார்,'' என தெரி வித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 19, 2025 03:44

கம்முனிசக்கோட்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏனென்றால் கம்முனிச சீனாவிலோ, ரஷ்யாவிலோ ஜனநாயகம் பேசினால் நேரடியாக பரலோகம் அனுப்பி விடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை