உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸில் குடுமிபிடி சண்டை: ஹூடா மீது குமாரி செல்ஜா குற்றச்சாட்டு!

காங்கிரஸில் குடுமிபிடி சண்டை: ஹூடா மீது குமாரி செல்ஜா குற்றச்சாட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலையில் ஏமாற்றம் அடைந்துள்ள காங்கிரஸில் தற்போது மோதல் ஏற்பட்டு உள்ளது. மாநில தலைவர் பூபிந்தர் ஹூடா மீது காங்கிரஸ் எம்.பி.,யும் முன்னாள் மத்தி அமைச்சருமான குமாரி செல்ஜா, குற்றம் சாட்டியுள்ளார்.ஹரியானா சட்டசபை தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகும் கூட காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து தனியாகப் போக விரும்பும் பலர் உள்ளனர். யாரும் ஒத்துழைக்க மாட்டோம் என என்று உறுதியாக இருக்கும்போது, என்னால் எதுவும் சொல்ல முடியாது என முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பூபிந்தர் ஹூடா கூறியிருந்தார். இதனால் காங்கிரஸின் மாநிலப் பிரிவைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.இவ்வாறு குற்றச்சாட்டு இருந்தபோதிலும், மாநிலத்தில் உள்ள 10 லோக்சபா தொகுதிகளில் ஐந்து இடங்களைப் பெற்ற காங்கிரஸ், 2019 இல் 28.42 ஓட்டு சதவீதத்தில் இருந்து 43.67 சதவீதமாக உயர்ந்ததால், ஹரியானாவில் மீண்டும் வரும் என்று எதிர்பார்த்ததுதோல்வி குறித்து குமாரி செல்ஜா கூறியதாவது: மாநிலத்தில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற தவறிவிட்டது.மாநிலத்தில் கட்சியை புத்துயிர் பெறுவதற்கும், அதற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதற்கும் கட்சியின் தேசிய தலைமை ஒரு முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்ககள் சோர்ந்துவிட்டார்கள். நான் உறுதியாக சொல்கிறேன், கட்சி தலைமை கட்சியை வலுப்படுத்த, புதிய திட்டத்தை வகுக்க வேண்டும், சரியான நிர்வாகிகளை தேடிபிடித்து அவர்களுக்கு பொறுப்பு அளித்தால் தான் சாதகமான முடிவு கிடைக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியாதவர்களை, இனி காங்கிரஸ் மேலிடம் அடையாளம் காணும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கட்சியின் தலைவர்கள், அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு குமாரி செல்ஜா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

lana
அக் 09, 2024 06:11

அதே போல 10 ஆண்டுக்கு பிறகு மத்தியில் ஆட்சி பிடிக்க முடியாமல் இருக்க காரணம் ஆன பப்பு வை தூக்கி எறிய வேண்டுமென்று கேட்டுக் கொள்ள வேண்டும்


Kasimani Baskaran
அக் 09, 2024 05:41

பொய்களை மட்டுமே தலைமை சொல்லும் பொழுது அடிமட்டத்தில் இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்?


Barakat Ali
அக் 08, 2024 22:55

தோல்விக்கு ஒரு காரணம் சாதி மத அரசியலை காங்கிரஸ் ஓவரா பண்ணிக்கிட்டே போகுது ...... மாயாவதி கிட்டயிருந்து பாடம் படிக்கணும் .... திமுகவை விட்டு ஓடிட்டா எங்க திருமாவுக்கும் அதே / அதோ கதிதான் .....


nv
அக் 08, 2024 22:46

முதலில் பப்புவை தூக்கி எறியுங்கள், தானாகவே காங்கிரஸ் வளரும்..


வாய்மையே வெல்லும்
அக் 08, 2024 23:59

உங்களின் வாதத்தை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள்கூற்று படி தீய மூர்க்க உடன்பிறப்புகள் கங்கிராஸ் அல்லக்கைகள் கண்மூடித்தனமாக ராவுளை நேசிக்கிறார்கள். அவர்உளறிக்கொட்டி பிதற்றினாலும் புகழ்ச்சி பொங்கி அல்லக்கைகளின் ஆரவாரம் இருக்கும் அதே ராவுளு நாட்டிற்கு எதிராக பேசினாலும் வாய்மூடி சம்மதிப்பார்கள் . கிட்டத்தட்ட ஜால்ராகோஸ்டி என சொன்னாலும் அது தகும். இப்படிப்பட்டவர்கள் இருக்கையில் ராவுளை தூக்கி எறிஞ்சா அமைதிக்கே பங்கமாய்டுமே சார்.. அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை