உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிக்காக போராடுகிறேன்: வயநாடு மக்களுக்கு பிரியங்கா கடிதம்

நீதிக்காக போராடுகிறேன்: வயநாடு மக்களுக்கு பிரியங்கா கடிதம்

புதுடில்லி: 'ஜனநாயகத்திற்காகவும், நீதிக்காகவும் போராடுகிறேன். எனக்கு வயநாடு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்தார். கடந்த அக்., 23ம் தேதி வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பேரணியாக சென்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் வயநாடு மக்களுக்கு பிரியங்கா இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வயநாடு சிறந்த இயற்கை வளங்களை கொண்டுள்ளது. உங்கள் எதிர்காலத்தை வலுப்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்.

தேர்வு செய்யுங்கள்!

மக்கள் பிரதிநிதியாக இந்த பயணம் எனக்கு முதல் பயணம் ஆகும். ஆனால் மக்களுக்காக போராடுவது முதல் முறை அல்ல. பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும், சுதந்திரமாக வேலை செய்யவும் நான் போராடுவேன். ஜனநாயகத்திற்காகவும், நீதிக்காகவும் போராடுவது எனது வாழ்வின் முக்கியமாக இருக்கிறது. இந்த போரை உங்கள் ஆதரவுடன் முன்னெடுத்து செல்வதற்கு நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நீங்கள் உங்கள் எம்.பி.,யாக என்னை தேர்வு செய்தால் நான் நன்றியுடன் இருப்பேன். இவ்வாறு பிரியங்கா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 26, 2024 21:59

இதற்கு முன் உங்களுடைய சகோதரர் ராகுல் காந்தி அதற்காக போராடவில்லையா..??


M Ramachandran
அக் 26, 2024 16:10

ஆமாம் நாங்க அப்படியெ நம்பிட்டோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை