நிதிக்குழு உறுப்பினர் பா.ஜ., கவுன்சிலர் வெற்றி
புதுடில்லி:டில்லி மாநகராட்சியில் நேற்று நடந்த நிதி மற்றும் கொள்கைக் குழு தேர்தலில் கவுதம்புரி பா.ஜ., கவுன்சிலர் சத்ய சர்மா, 35 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.டில்லி மாநகராட்சியில் நிலைக்குழு தேர்தல் நடக்கிறது. நேற்று நடந்த நிதி மற்றும் கொள்கைக் குழு உறுப்பினருக்கான தேர்தலில், கவுதம்புரி பா.ஜ., கவுன்சிலர் சத்ய சர்மா, ஜெய்த்பூர் ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹேமா ஆகியோர் போட்டியிட்டனர்.மொத்தம் பதிவான 227 ஓட்டுக்களில், சத்ய சர்மா - 130, ஹேமா - 95 ஓட்டுக்கள் பெற்றிருந்தனர். இரண்டு ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.வெற்றி பெற்ற சத்ய சர்மாவுக்கு, மேயர் ராஜா இக்பால் சிங் சர்மா மற்றும் பா.ஜ., கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.