உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊறுகாய் போட்டவர் அமைச்சர் ஆக கூடாதா ?

ஊறுகாய் போட்டவர் அமைச்சர் ஆக கூடாதா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஊறுகாய் போட்டவர் நிதி அமைச்சர் பதவி வகிக்க கூடாதா ? என்னை பொறுத்தவரை ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பது இல்லை என நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.வருவாய் வரி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியது, வருமான வரி செலுத்தும் நடைமுறையை எப்படி எளிமைப்படுத்துவது, எப்படி இலகுவாக்குவது என்பதைப்பற்றி ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்திலும் ஆலோசித்து ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறோம்.இன்றைய சூழலில் ஜி.எஸ்.டி.யில் இவ்வளவு மாற்றதை கொண்டு வருவதற்கு நாடு தயாராக உள்ளதா என நாம் பேசினாலே பதில் கிடைத்துவிடும். டிஜிட்டல் வெற்றி வாயிலாக எதிர்பாராத இடத்தில் உள்ளோம். டிஜிட்டல் பொருளாதாரத்தின் வெற்றி தான் இன்று சந்தையை உருவாக்குகிறது. டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி இந்தியாவில் அபரிமிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதன் காரணமாக, நொடிப்பொழுதில் இந்தியாவில் இருந்து எங்கு வேண்டுமென்றாலும் பணம் அனுப்ப முடிகிறது. இதை பற்றி நாம் எடுத்துச்செல்ல வேண்டும்.140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1.47 கோடி பேர் மட்டுமே ஜிஎஸ்டி வரி செலுத்துகின்றனர். நேரடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 7.79 கோடி வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது.இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், 10 பேர் உண்மையான தகவல்களை பரப்புகின்றனர் என்றால் 100 பேர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.இன்னும் அதிகமாக பேசினால் ஊறு போட்டவர் எல்லாம் அமைச்சராக வேண்டுமா என்கின்றனர். இப்படி நாம் நாட்டு மக்களையே இழிவாக பேசினால், ஊறுகாய் போட்டவர் நிதி அமைச்சராக வரக்கூடாதா, அப்படி ஒரு சட்டம் இருக்கா ? “ஊறுகாய் போடுவதை ஒருபோதும் கவுரவக் குறைச்சலாக பார்ப்பதில்லை” . அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Lion Drsekar
செப் 06, 2024 11:54

இங்கு ஜாதி , மொழி , மதம் இவைகள்தான் முக்கிய பங்கு , அதில் ஒர சாராரை விடாமல் துரத்தி துரத்தி அழித்தும் முழுவதுமாக அழியவில்லையே என்ற கோவம் ஒருபுறம், மேலும் சிலர் தப்பித்து வெளிநாடுகளுக்குச் சென்று இந்திய கலாச்சாரத்தை வளர்ப்பதைக்கண்டும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கும்போது ,அங்கும் இங்கு செய்வதைப்போல இடையூறு செய்து முழுவதுமாக உலகத்தில் எங்குமே இருக்கக்கூடாது என்று போட்டிபோட்டுக்கொண்டு இயங்கும் இந்த காலத்தில் ஊறுகாய் என்றெல்லாம் பேசுவது , காது கேட்க்கடவன் காதுகளில் ஊதும் சங்கொலிதான் , ஒரு சாராருக்கு எதிராக பேசுபவர்கள் செயல்படுபவர்கள் அனைவர்களின் குடும்பத்திலும் இவர் யாருக்காக எதிராக குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் சார்ந்த சமூகம் ஒரு உறுப்பினர்களாக இருக்கிறார்கள், இதுதான் இன்றைய பரிணாம அழற்சி வளர்ச்சி , வந்தே மாதரம்


J.Isaac
செப் 06, 2024 08:57

பழக்க தோஷமா?


Velan Iyengaar
செப் 06, 2024 07:58

வாயை கொடுத்துட்டாங்க ..... ..... இனி புண்ணாக போகுது ....ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டாங்க..... வேறு என்ன வேணும் சொல்லு ....


Velan Iyengaar
செப் 06, 2024 07:56

நம்ம ஊறுகாய் ஒரு பேட்டியில் GST குறித்த விளக்க கேள்விக்கு சிரித்து மழுப்பிய விதம் இவர் எதற்கு மட்டும் வேலைக்கு ஆவார் என்பது தெளிவாக தெரிந்தது ..... என்ன செய்ய ... அந்த கட்சியில் திறமைக்கு பஞ்சம் பஞ்சமோ பஞ்சம் ...... TECHNOKRAT கையில் ..SME கையில் முக்கிய துறைகள் .... எல்லாம் புறவாசல் நியமனங்கள் ...ஆனால் நிதி அமைச்சகம் மட்டும் எடுப்பார் கைப்பிள்ளை கையில் .....தலையாட்டி பொம்மை கையில் ...... எல்லாம் நம்ம அகராதி ஒன்னு திறமைக்கு பஞ்சம் ....இல்லை போட்டி பயம் .... இவ்ளோ தான் .......


Velan Iyengaar
செப் 06, 2024 07:50

பொதுமக்கள் கருத்துக்கள் சேரவேண்டிய இடத்துக்கு போய் சேர்வது மகிழ்ச்சி கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது எல்லாம் அகராதியில் இல்லை ... சரியான அகராதி கேஸுகள்


Velan Iyengaar
செப் 06, 2024 07:47

எதுக்கு மட்டுமே லாயக்கு என்ற சுய பரிசோதனை அவருக்கு அல்லது .. நாட்டுக்கு அல்லது .....


Kasimani Baskaran
செப் 06, 2024 05:46

திராவிடக்கோட்பாடுகள் படு சிக்கலானவை. ஆசிரியர் இல்லாமல் பள்ளியும் நடக்கவேண்டும் - அதே சமயம் மாணவர்களும் நன்றாக படிக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கை. 99.9999% சாத்தியமில்லாதவை அவர்களின் கோட்ப்பாடுகள்.


Indhuindian
செப் 06, 2024 05:21

மத்திய அரசு ஜீ எஸ் டி வரி போடுதா இதென்ன புது உருட்டு. திராவிட மாடல்ல இதெல்லாம் சகஜமப்பா. ஜீ எஸ் டி வரி நிர்ணயம் பண்றது போன்ற சமாச்சாரங்களும் ஜீ எஸ் டி கவுன்சில்லன்னு ஒன்னு இருக்கு அவங்கதான் முடிவு பண்றாங்க. அதுலே நம்ம மாநில நிதி மந்திரியும் இருக்காரு. எங்க வூட்டு காரரும் கச்சேரிக்கு போனாரான்னுட்டு பெரிய விமானம் கிடைச்சா அதுலே சொகுசா போயிட்டு சமோசா காபி குடிச்சிட்டு வந்தா போதுமா இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் அங்கே பேசி முடிவு எடுக்கணும் அது சரி அந்த உருகா வரி நம்ம தமிஷநட்டுக்கு மட்டும்தானா இல்லே மத்தவங்களுக்கு உண்டான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க


Indhuindian
செப் 06, 2024 05:16

எங்க வூர்ல மந்திரியாகணும்னா நியாமா தொஷில் பன்னாமட்டும் போதாது அதுக்குன்னு வேறே குவாலிபிகேஷன் இருக்கு.


சமூக நல விரும்பி
செப் 05, 2024 22:26

கொலை கொள்ளை திருட்டு சம்பந்த பட்டவர்கள் அமைச்சர்கள் ஆகும் போது ஊறுகாய் பொட்டவர் என் அமைச்சர் ஆக கூடாது.


முக்கிய வீடியோ