வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தீய தீ தீ. எல்லாம் தேர்தல் சுரம்
கொல்கட்டா: உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வேலையிழந்த 'குரூப் சி' மற்றும் 'டி' ஊழியர்களுக்கு மேற்கு வங்க அரசு நிதியுதவி அளிப்பதற்கு கொல்கட்டா உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு 2016ல், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 26,000 பேரை கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் பணிநீக்கம் செய்தது. இந்நிலையில், வேலையிழந்த ஆசிரியர் அல்லாத குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு, மாதந்தோறும் முறையே தலா, 25,000 ரூபாய் மற்றும் தலா 20,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை சமீபத்தில் மேற்கு வங்க அரசு துவங்கியது. இதை எதிர்த்து, கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேலையிழந்த குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிப்பதற்கு, வரும் செப்., 26 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மனுதாரரின் வாதங்களுக்கு எதிராக நான்கு வாரங்களுக்குள், மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கடுத்த இரண்டு வாரங்களுக்குள் மனுதாரர் பதிலளிக்க வேண்டும். அதுவரை வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தீய தீ தீ. எல்லாம் தேர்தல் சுரம்