உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் போனில் பேச்சு

பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் போனில் பேச்சு

புதுடில்லி: பிரதமர் மோடியுடன் பினலாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் போனில் உரையாடினார்.இந்த உரையாடலின்போது, இந்திய-ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பிற்கும் பரஸ்பரம் நன்மை விளைவிக்கக்கூடிய முறையில் விரைவாக நிறைவடைவதற்கு, பின்லாந்து முழுமையாக ஆதரவு தெரிவிப்பதாக பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் உறுதி தெரிவித்தார்.இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் ஆர்வம் தெரிவித்தனர்.இந்த பேச்சுவார்த்தைகள் 2007 முதல் நடந்து வருகின்றன. சமீபத்தில் இது மீண்டும் வேகம் பெற்றுள்ளது, மேலும் பின்லாந்து போன்ற ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் நாடுகளின் ஆதரவு இதை விரைவாக முடிக்க முக்கியமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி