மேலும் செய்திகள்
சிலிண்டர் விபத்தில் தீயணைப்பு வீரர் காயம்
30-Oct-2026
புதுடில்லி: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்த இரண்டு பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கிழக்கு டில்லி, விவேக் விஹார் பேஸ்–1ல், மூன்றடுக்கு குடியிருப்பின் முதல் தளத்தில் இருந்த வீட்டில், நேற்று காலை, 8:00 மணிக்கு தீப்பற்றி மளமளவென பரவியது. சோபா, நாற்காலிகள், உணவு மேஜை, திரைச்சீலைகள் என, வீட்டு உபயோகப் பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்து, கரும்புகை சூழ்ந்தது. தகவல் அறிந்து, நான்கு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். இதற்கிடையில், அந்த வீட்டில் புகைக்குள் சிக்கி மயங்கிய இருவரை, அக்கம்பக்கத்தவர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். காலை, 9:45 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
30-Oct-2026