உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் திடீர் தீ; விரைந்த தீயணைப்பு வீரர்கள்

ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் திடீர் தீ; விரைந்த தீயணைப்பு வீரர்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது. ஜம்முவில் உள்ள சட்டசபை கட்டடத்தில் முகப்பு அறை பகுதியில் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கே இருந்த நாற்காலிகள், மேசைகள், சோபாக்கள் உள்ளிட்ட பல்வேறு பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாயின.இதை அறிந்த அங்குள்ளோர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இதனால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.இந்த விபத்தில் முகப்பு அறை சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ஏராளமான முன்னாள் கவர்னர்களின் போட்டோக்கள் எரிந்து சேதம் அடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

arumugam mathavan
ஜூன் 11, 2025 13:49

சட்டசபை வளாகத்தில் காவலுக்கு யாரும் இல்லையா...என்னதான் நடக்குது காக்ஷ்மீரத்தில்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை