மதகுரு மீது துப்பாக்கிச்சூடு
மீரட்:உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் மசூதிக்கு வெளியே, துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் அடைந்த மதகுரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மீரட் லிசாடி கேட் மசூதிக்கு வெளியே நேற்று, நயீம்,35, என்ற மதகுரு நின்று கொண்டிருந்தார்.அப்போது திடீரென யாரோ நயீம் மீது துப்பாக்கியால் சுட்டனர். அவருடைய காதில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சர்தாஜ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடி வருகின்றனர்.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.