உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2047க்குள் வளர்ந்த நாடாக மாறணும்; ஒன்றுபட்டு தயாராக மோடி அழைப்பு

2047க்குள் வளர்ந்த நாடாக மாறணும்; ஒன்றுபட்டு தயாராக மோடி அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற, தேச எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்' என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.குஜராத் மாநிலத்தில் நடந்த சுவாமி நாராயண் கோவிலின் 200வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: ஜாதி, மதம்,மொழி ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தை பிளவுப்படுத்தும் சதி நடக்கிறது. தேச விரோதிகளின் இந்த முயற்சிகளை நாம் புரிந்து கொண்டு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த செயலை நாம் முறியடிக்க வேண்டும். படித்த இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yfgbcyth&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வளர்ந்த நாடு

வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும். இந்திய இளைஞர்களின் திறமை உலக நாடுகள் முழுவதும் ஈர்க்கப்பட்டுள்ளது. உலக அளவில் நமது இளைஞர்களின் தேவை அதிகரிக்க போகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற ஒற்றுமை மிகவும் முக்கியமானது. 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற, தேச எதிரிகளுக்கு எதிராக ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அதனை கண்டறிந்து விட்டால் போதும்; நம் வாழ்வு மாறிவிடும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

வைகுண்டேஸ்வரன்
நவ 11, 2024 21:43

hari, நான் இந்தியா வை சொல்றேன். மோடியும் இந்தியா வைத்தானே சொல்றார்? தமிழ் நாடு எவ்வளவு உயர்ந்து, வளர்ந்து, முன்னேறி இருக்கு என்று உனக்கு தெரியல hari. ஒன்றிய அரசின் நிதி அயோக் னு ஒண்ணு இருக்கு. அதோட மாநிலங்களின் நிலை பற்றிய அறிக்கை வருடா வருடம் வரும். நெட்டில் இருக்கு. 64 பக்கம். டவுன்லோட் பண்ணி படிங்க. தமிழ் நாடு எல்லா மாநிலங்களை விடவும் மிகவும் முன்னேறி உயர்ந்து நிற்கறது என்கிற உண்மை புரியும்.


Anonymous
நவ 12, 2024 10:39

வாங்குற காசுக்கு திமுகவின் ஐ டி விங் நல்ல வேலை செய்யுதுண்ணு சொல்லுங்க, பக்கம் பக்கமா அடிச்சு விட வேண்டியது தான், ஏட்டு சுரைக்காய், கறிக்கு உதவாது, தெரியுங்களா வைகுண்டேஸ்வரன்?


Indian
நவ 11, 2024 18:04

மறுபடியும் வடை தான் ...என்னால் வடை மட்டும் தான் சுட முடியும் .


Mario
நவ 11, 2024 17:03

மறுபடியும் முதலிருந்தா


அப்பாவி
நவ 11, 2024 16:58

எனக்கும் ஆசைதான். ஆனா வாயால் வடை சுடத் தெரியாதே.


Sundar R
நவ 11, 2024 16:30

If Bharat is a fully developed country, 1. Politicians looting peoples money and running Corporate companies if found guilty, should be hanged. 2. There wont be e based reservation begging for seats in colleges and jobs in government offices. Everybody will be working in some jobs irrespective of e. 3. People will reject freebies from politicians. E.g., Rs. 3000/- to woman, Free TV, Free Bus ride, Free mixie etc. 4. The drainage tem will be the best. No river will be polluted. Human excretions should not be drained into the pure water flowing into the rivers. 5. If corruption is handled like Singapore, corruption will not be there. Now, Politicians are doing corruption. Officials in Government offices are doing corruption. Many people are discussing about this subject only. 6. There will be social security for all the senior citizens by way of pension and Health Insurance. 7. There will be discipline in all the places of our country. Discipline should be first enforced in both the houses of the parliament. 8. There should not be any wastage of human resources. Everybody should work and everybody should be compensated with a sufficient salary. 9. There wont be any beggars. 10. For students, education and play should be balanced at 50:50. For elders, work and life should be balanced at 50:50.


K.n. Dhasarathan
நவ 11, 2024 16:30

அப்போ இன்னும் நம் நாடு வளராத நாடுதான், நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள், சரிதானா பிரதமர் அவர்களே அப்படி என்றால் கடந்த பத்து வருடங்களாக என்னதான் பண்ணினீர்கள் ? ஆதாரத்தோடு புள்ளி விபரம் ஏதாவது காட்ட முடியுமா ? அதை சொல்ல வேண்டியதுதானே அப்படியென்றால் எந்த புள்ளி விபரமும் இல்லைதானே ? இனியும் நாங்கள் நம்பி ஏமாறவேணுமா ? ஒரு சிறு தகவல், பத்து வருடம்முன் ஐம்பது லட்சம் கோடி கடன் இப்போது நூற்றி எழுபது லட்சம் கொடியாமே, உண்மை சொல்ல முடியுமா ?


GMM
நவ 11, 2024 15:29

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு, மத அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து, மொழி அடிப்படையில் மாநில நிர்வாகம் மூலம் தேச விரோதிகள் முயற்சியால் பிளவு படுத்தி, இந்தியா 100 ஆண்டை நோக்கி வெற்றி நடை போடுகிறது. ஒன்றிணைத்து செயல்பட இதில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். வளர்ந்த நாடாக மாறினாலும், பலன் நாட்டிற்கும் வரி செலுத்தும் மக்கள், நிறுவனங்களுக்கு போய் சேராது. தன்னை காக்க நேரு காங்கிரஸ் வளர்ந்த நாடாக இருக்க வேண்டிய ஒருங்கிணைத்த இந்திய நாட்டை பிரித்து , இன்னும் காங்கிரஸ் ஆதரவு பெறுகிறது என்றால், தேச எதிரிகள் நாட்டின் உள் நன்கு ஊடுருவி வாழ்கிறார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 11, 2024 15:05

திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் ஆசைப்படுறீங்க .... இந்தியாவை வளர்ந்த நாடாக்கவும் ஆசைப்படுறீங்க ..... எப்படி முடியும் ????


வைகுண்டேஸ்வரன்
நவ 11, 2024 14:37

நாலே நாலு பேர் இந்தியாவை விட்டு, குறைந்தபட்சம் ஆட்சியை விட்டு நீங்கினாலே போதும். இந்தியா முன்னேறி, அமைதியான நாடாக, வளர்ச்சி பெற்ற நாடாக மாறிவிடும். இந்தியா வளர்ந்து கொண்டு தான் இருந்தது. 2014 ல் தான் ஆட்சியாளர்கள் brake போட்டுட்டாங்க. அப்புறம் reverse கியர் போட்டு ஓட்டிகிட்டிருக்காங்க. ஒன்றும் செய்ய முடியாது.


hari
நவ 11, 2024 17:40

நீ தமிழ் நாட்டை பற்றி சொல்றியா வைகுண்டம்


aaruthirumalai
நவ 11, 2024 14:36

வாழ்க வளர்க! நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை