உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரமோன் மகசேசே விருது பெற்ற முதல் இந்திய தொண்டு நிறுவனம்

ரமோன் மகசேசே விருது பெற்ற முதல் இந்திய தொண்டு நிறுவனம்

மணிலா: ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் பிலிப்பைன்சின் 'ரமோன் மகசேசே' விருதை, ராஜஸ்தானைச் சேர்ந்த, 'எஜுகேட் கேர்ள்ஸ்' என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் பெற்றுள்ளது. இந்திய தொண்டு நிறுவனம் ஒன்று இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறை. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், துணிச்சல், தன்னலமற்ற சமூக சேவையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரமோன் மகசேசே விருது வழங்கி கவுர வித்து வருகிறது. நடப்பாண்டுக்கான இவ்விருது ராஜஸ்தானைச் சேர்ந்த, 'எஜுகேட் கேர்ள்ஸ்' என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 67வது விருது வழங்கும் விழாவில், பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த, 2007ல் ச பினா ஹுசைன் என்பவரால் துவங்கப்பட்ட இத்தொண்டு நிறுவனம், வட மாநிலங்களில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில், பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட, 24 லட்சத்துக்கும் அதிகமான ஏழை பெண்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி அளித் துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 09:42

இப்படிப்பட்ட தொண்டு நிறுவனத்தைப்பத்தி இந்தியாவில் எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடாது. இதுவே ஒரு சினிமா நடிகையோ நடிகர்கரோ, அல்லது ஒரு கிரிக்கெட் மைதான துப்புரவுப்பணியாளரோ இந்த தொண்டு நிறுவன வாசலில் நின்றிருந்தால் கூட புகைப்படத்துடன் செய்தி வெளியாகும்.


Ramesh Sargam
நவ 09, 2025 08:02

பசியோடு இருப்பவர்களுக்கு சாப்பாடு கொடுப்பது சிறந்த செயல். அடுத்து கல்வி அளிப்பது மிக மிக சிறந்த செயல். விருது வென்ற இந்திய தொண்டு நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள்.


புதிய வீடியோ