உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டின் 4 மாவட்டங்களுக்கு முதல் முறையாக ரயில் பாதை

ஜார்க்கண்டின் 4 மாவட்டங்களுக்கு முதல் முறையாக ரயில் பாதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி, கும்லா, சிம்தேகா, சாத்ரா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், ரயில் பாதை வசதி இல்லாமல் இருந்தது. இந்த மாவட்டங்களில் ரயில் பாதை அமைக்க ஜார்க்கண்ட் ரயில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது.ராஞ்சி - லோகர்தாகா இடையே ஏற்கனவே ரயில் பாதை உள்ளது. அந்த வழித்தடத்துடன் கும்லா, குந்தி, சிம்தேகா ஆகிய மாவட்டங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 160 கி.மீ., துாரத்துக்கு அமைய உள்ள இந்த வழித்தடம், ராஞ்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் வரும். ரயில் பாதையால் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தலைநகர் ராஞ்சி செல்வது எளிதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஜன 21, 2025 06:39

இந்திய அரசுக்கு வாழ்த்துக்கள்


Visu
ஜன 21, 2025 02:52

சுதந்திரம் பெற்றபின் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் ஏன் இதை செய்வில்லை


புதிய வீடியோ