உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய் - மாட்டு கொழுப்பு- பன்றி கொழுப்பு : ஆய்வறிக்கை சொல்வது இதைத்தான்

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய் - மாட்டு கொழுப்பு- பன்றி கொழுப்பு : ஆய்வறிக்கை சொல்வது இதைத்தான்

அமராவதி: திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது தொடர்பான சமீபத்திய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளதன் மூலம் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளில் கொழுப்பு கலப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததை கண்டு முந்தைய முதல்வர் ஜெகன்மோகனும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டும் என்றார். இவரது பேட்டி பக்தர்களை அதிர்வடைய செய்துள்ளது.இது தொடர்பாக தெலுங்கு தேச கட்சியின் வெங்கடரமண ரெட்டி வெளியிட்ட அறிக்கையில்,திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் மாதிரிகுஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி, ஆய்வுக்கூடத்தில் கடந்த ஜூலை மாதம் பரிசோதனை செய்யப்பட்டதில் தரமற்ற நெய் விநியோகிக்கப்பட்டுள்ளது, அதில் மீன் எண்ணெய், பன்றியின் கொழுப்பு, மாட்டு கொழுப்பு, பாமாயில், சோயா எண்ணெய் ஆகியன கலந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.தேவஸ்தான செயல் அதிகாரி கூறியது, கடந்த இரு மாதங்களுக்கு முன் 8.5 லட்சம் கிலோ நெய் விநியோகம் கோரி விடப்பட்ட டெண்டரில் அந்த டெண்டர் நிறுவனம் 68 ஆயிரம் கிலோ நெய் சப்ளை செய்ததில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றதாக உள்ளதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்தி நெய் சப்ளை நிறுத்தப்பட்டு, டெண்டர் நிறுவனம் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது என்றார்.

ஜெகன் மறுப்பு

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஓய்.எஸ்.ஆர். காங். கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துள்ளார். ஓய்.எஸ்.ஆர்.,கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்தியுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. லட்டு பிரசாதம் தொடர்பாக நாயுடுவின் கருத்துக்களில் உண்மையில்லை. அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்க தயங்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Natchimuthu Chithiraisamy
செப் 25, 2024 19:31

கிருஸ்துவன் நோக்கம் இந்து மதத்தை சிதைப்பதே ஆவணங்கள் கல்வி திட்டங்கள் கோவில்கள் அதுவும் கட்சி இந்துக்கள் மூலமாக. கடவுள் ஜெகனை தண்டித்த மாதிரி தமிழ் நாட்டில் திமுக காரர்கள் அவர்கள் குடும்பம் தண்டனை அனுபவிக்கும்


Sekar Shunmugaraj
செப் 24, 2024 22:06

ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில்பரிசோதனை மையங்கள் இருக்கும்போது குஜராத் மாநிலத்தில் பரிசோதிக்க வேண்டியதன் அவசியம் என்ன? சந்திரபாபு குற்றம் சாடுகிறார். ஜெக்மோஹன் ரேட்டிங் பிரதமருக்கு எழுதுகிறார், லட்டு விவகாரம் நிச்சயமாக அரசியல் நோக்கம் கொண்டது, மக்கள் நலத்துக்கோ பக்திபாதுகாப்பிற்கோ இல்லை


Bhaskaran
செப் 21, 2024 10:49

சென்னை மின்ரயில்களில் விற்கப்படும் நெய் பிஸ்கட் நயம் மாட்டுக் கொழுப்பில் செய்யப்பட்டதுதான்.பயணிகள்குறிப்பாக மென்பெருள் பொறியாளர்கள் போட்டி போட்டு வாங்கி சாப்பிடுவார்கள்


KATHIR ANAND
செப் 21, 2024 09:18

திருப்பதி லட்டு விவகாரத்தை ஒரு சாரார் தான் அரசியலுக்காக ஊதிப் பெருசாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பொது ஜனம் மாமிச கொழுப்பு கலந்த லட்டுவை பற்றி கண்டுகொள்ளவே இல்லை. அதற்கான சான்று நேற்றைய தினம் தினசரி விற்கும் 3 லட்சத்திற்கு மாறாக 3.3 லட்சமாக லட்டு விற்பனையாகியுள்ளது . விமர்சனங்கள் தான் அதிகமாகியுள்ளன . லட்டு விற்பனை குறையப்போவதில்லை .


Gurusamy
செப் 20, 2024 16:38

இவ்வளவு நாள் ஆசை ஆசையா சாப்பிட்ட திருப்பதி லட்டுவை நினைச்சா வாந்தி வாந்தியா வர்ற மாதிரி இருக்கு கடைசியில் வெங்கடாசலபதிக்கே நாமம் போட்டுட்டாங்களே என்ன கொடுமை சரவணா அந்த நெய் சப்ளை செய்த திண்டுக்கல் கம்பெனி ஓனர் திமுக அனுதாபியாம். அவர்தான் பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கும் நெய் சப்ளை பண்றாராம்.சமூக வலைத்தளத்தில் நியூஸ் வைரலாக ஓடுகிறது.இனிமே இந்த இரண்டையும் எவனாவது சாப்பிடுவானா? கோவிந்தா கோவிந்தா.


RAMAKRISHNAN NATESAN
செப் 20, 2024 18:27

\\ நெய் சப்ளை செய்த திண்டுக்கல் கம்பெனி ஓனர் திமுக அனுதாபியாம். //// நான் நம்புறது என்னன்னா அந்த திமுக அனுதாபி கூட ஹிந்துவா இருந்தா இப்படியெல்லாம் செய்ய மனசு வராது .........


Lion Drsekar
செப் 20, 2024 12:25

இப்படிஎதுவுமே நடக்கவில்லை என்று கூறுபவர்களுக்கு ஒரே ஒரு சாட்சி, லட்டு தயாரிக்க வாங்கப்பட்ட எல்லா பொருட்களின் பெயர், தரம் விலைப்பட்டியலை பார்த்தாலே தெரியுமே, இங்குதான் நடைமுறை என்று வந்தாலே தனியாக ஒரு தீவையே உருவாக்கிய ஒரு நபர் இங்கு இருக்கும்போது வழக்கு வழக்கு என்று நடந்து கொண்டே இருந்த நிலையில்


RAMKUMAR
செப் 20, 2024 09:26

நீங்கள் இந்த வார்த்தை பயன் படுத்தி இருக்க கூடாது. கடவுளிடம் கலப்படம் இருக்க கூடாது .. My Dear Sir


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2024 07:45

வெண்ணையும் நெய்யும் கூட ஆட்டுக்கொழுப்பு தானே??


RAMKUMAR
செப் 20, 2024 09:28

பசாப்பிட்டால் என்ன குற்றம் .... Please sir ...


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2024 07:44

குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி, ஆய்வுக்கூடத்தில் நோட் திஸ் பரோயின்ட் மைலார்டு.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2024 07:39

மீன் எண்ணெய் உடலுக்கு நல்லது