மேலும் செய்திகள்
இடுஹட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா
12-Mar-2025
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு நகரின் அருகே உள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 'கூத்தபிஷேகம் -தாலப்பொலி' என்ற பெயரில் திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு திருவிழாவிற்கு நேற்று கொடியேற்றப்பட்டது.காலையில், சிறப்பு பூஜைகளுக்கு பின், 8:45 மணிக்கு தந்திரி அண்டலாடி உண்ணி நம்பூதிரிப்பாடின் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து கலசாபிஷேகம், பிரஹ்ம கலசாபிஷேகம் ஆகியவை நடந்தன.காலை, 10:30 மணிக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. மாலை, 4:30 மணிக்கு ஸ்ரீபுரம் தாந்திரீக ஆய்வு மைய தலைவர் கிரிஷ்குமாரின் ஆன்மிக சிறப்புரை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, வரும், 30ம் தேதி முதல் ஏப்., 6ம் தேதி வரை நடன சங்கீத உற்சவம் நடக்கிறது. ஏப்., 11ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் திருவிழா கொண்டாடப்படுகிறது.
12-Mar-2025