உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் போலீசுடன் உல்லாசம்; கான்ஸ்டபிளான டி.எஸ்.பி.,

பெண் போலீசுடன் உல்லாசம்; கான்ஸ்டபிளான டி.எஸ்.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ : பெண் போலீசுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த போலீஸ் டி.எஸ்.பி., ஒருவர், கான்ஸ்டபிளாக பதவி இறக்கப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் கிருபா சங்கர் கண்ணுாஜியா. இவர், 2021ல், உன்னாவ் போலீஸ் ஸ்டேஷனில் சர்க்கிள் அதிகாரியாக இருந்தார். அப்போது, ஒருநாள் குடும்ப சூழல் காரணமாக விடுப்பு வேண்டும் எனக் கூறி சென்றவர், வீட்டுக்கு செல்லாமல் கான்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தன்னுடன் பணிபுரியும் பெண் கான்ஸ்டபிளுடன், கிருபா சங்கர் தனிமையில் இருந்துள்ளார். தன் மொபைல் போன்களையும் அவர் அணைத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, அவரை தொடர்பு கொள்ள முடியாத கிருபாவின் மனைவி, உன்னாவ் போலீஸ் ஸ்டேஷனில் முறையிட்டார். மொபைல் போன் டவரை வைத்து, அவர் இருப்பிடத்தை அறிந்த போலீசார், ஹோட்டலுக்கு சென்று கிருபா மற்றும் அவருடன் இருந்த பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. இதன் முடிவில், டி.எஸ்.பி.,யாக பணியில் இருந்த கிருபா சங்கர், கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய லக்னோ ஐ.ஜி., பரிந்துரைத்தார். இதையடுத்து, கோரக்பூர் ஆயுதப் படைப் பிரிவின் கான்ஸ்டபிளாக அவர் தற்போது நியமிக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sivak
ஜூன் 24, 2024 22:44

அந்த பெண் போலீசை என்ன செய்தார்கள் ... அதை ஏன் யாரும் பேச மாட்டேங்கராங்க


M Ramachandran
ஜூன் 25, 2024 13:10

அந்த பெண் போலீசுக்கு ப்ரமோஷன்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 11:18

இருந்தாலும் அது தமிழ்நாட்டை விட பின்தங்கிய மாநிலம் ......


Barakat Ali
ஜூன் 24, 2024 10:29

எங்கூர்ல நடிகைக்கு ஊடு வாங்கிக்கொடுத்தா துணை மன்னராகக் கூட ஆயிரலாம் ....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 10:14

டும்மீலு நாட்டில க சாராயம் ஆறா ஓடியிருக்கு ...... ஆகவே புலிகேசி மன்னரை அரண்மனை சிப்பந்தியா இறக்கணும் ......


Barakat Ali
ஜூன் 24, 2024 10:28

சிப்பந்தி பதவி சாதாரண பதவியாக இருக்கலாம்.. ஆனால் பொறுப்பான பதவி ...


Barakat Ali
ஜூன் 24, 2024 09:39

இந்த லட்சணத்துல முன்னேறின மாநிலமாம் ....


Barakat Ali
ஜூன் 24, 2024 10:03

இப்படித்தான் ......


பரணிகுமார்
ஜூன் 24, 2024 07:26

ஏதோ ஒரு படத்தில் நம்ம வடிவேலு இப்பிடித்தான் பதவி இறக்கம் செய்யப்பட்டு வீட்டைத் துடைப்பார். தமிழகம் முன்னோடிடா


கௌதம்
ஜூன் 24, 2024 06:42

இதே நம்ம ஊரா இருந்தால்?


theruvasagan
ஜூன் 24, 2024 08:35

நம்ம ஊரா இருந்தா புரமோஷன் குடுத்து வடிவேலு சொல்ற மாதிரி டிஜிபிபி.. ஆக்கிடுவாங்க.


Kalyanaraman
ஜூன் 24, 2024 06:27

சபாஷ். இப்படிப்பட்ட கடும் தண்டனைகளால் மட்டுமே அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்வார்கள். ஆனால், இவ்வளவு கீழ் பதவிக்கு இறக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.


S BASKAR
ஜூன் 24, 2024 07:05

செய்வதெல்லாம் செய். அதை சிறப்புடனே செய்


Walter Vadivelu
ஜூன் 24, 2024 06:20

Good decision ? appreciated


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ