உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிருஷ்ணா நதியில் வெள்ளம்: 187 ஆடுகள் பரிதாப பலி

கிருஷ்ணா நதியில் வெள்ளம்: 187 ஆடுகள் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவின் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், 187 ஆடுகள் அடித்துச் செல்லப்பட்டன. கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டம், மேலிகட்டி, ஜங்கினாகட்டி கிராமங்களைச் சேர்ந்த ஆடு மேய்ப்பவர்கள், கிருஷ்ணா நதியின் மத்திய பகுதியில், 218 ஆடுகளை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். அப்போது, நாராயணபுரா பசவசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்தது. ஆடு மேய்ப்பவர்கள் மட்டும் கரைக்கு தப்பி வந்தனர். 'ஆடுகளை மீட்க வேண்டும்' என்று, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நேற்று நிறுத்தப்பட்டது. பின், கரைகளில் உள்ள மீனவர்களின் படகுகள் மூலம் நதியின் மத்திய பகுதிக்கு சென்று, 31 ஆடுகளை மீட்டனர்; 187 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தன. ' ஆடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
செப் 02, 2025 04:06

இப்படி பொறுப்பில்லாம ஆடுகளை மேய்க்க விட்டால் அதற்க்கு அரசிடம் எப்படி கோரிக்கை வைக்கிறாங்க ?