உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரலாற்றில் முதல்முறை; ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

வரலாற்றில் முதல்முறை; ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் நாளை 26ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட இருக்கிறது. இந்திய பாதுகாப்புத்துறை வரலாற்றில் ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது முதல்முறையாகும். ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய இரு போர் கப்பல்களும் திட்டம் 17 ஆல்பா (P-17A)ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு அதிநவீன ரகசிய தொழில்நுட்பத்துடன் இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது. இரு அதிநவீன போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் நாட்டுக்கு அர்ப்பணிப்பது இதுவே முதல் முறையாகும். இந்தக் கப்பல்கள், முந்தைய ஷிவாலிக் ரக போர்க்கப்பல்களை விட 5 சதவீதம் பெரியவை. டீசல் இயந்திரங்கள் மற்றும் கேஸ் டர்பைன்களைப் பயன்படுத்தி இயக்கப்பட இருக்கின்றன. 76 மிமீ எம்ஆர் துப்பாக்கி, 30 மற்றும் 12.7 மிமீ ஆயுத கட்டமைப்புகள் என பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச நாடுகளில் சீனாவின் வளர்ந்து கடல் விரிவாக்கம் இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி வரும் நிலையில், இந்த இரு கப்பல்களும் இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கடல் வர்த்தக பாதைகளை பாதுகாப்பது மற்றும் மலாக்கா நீரிணையில் இருந்து ஆப்பிரிக்கா வரை இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் இருப்பை நிலைநிறுத்துவதே நோக்கம் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஆக 25, 2025 21:55

இங்க சின்னக் கட்டுமரம் போதும் ன்னு இருக்காங்க.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 25, 2025 19:21

நாட்டுக்கு பெருமை சேர்த்த விடியல் சார் வாழ்க ,


நாஞ்சில் நாடோடி
ஆக 25, 2025 19:07

பாரத் மாதாகி ஜெய்...


R. SUKUMAR CHEZHIAN
ஆக 25, 2025 18:32

பெருமையாக உள்ளது, வாழ்த்துகள், மலாக்கா நீரிணை மற்றும் ஹிந்து மஹாசமூத்திரத்தில் நாம் முழுமையாக ஆதிக்கம் செலுத்த வேண்டும். அமெரிக்க, சீனா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி நாம் இராணுவ மற்றும் பொருளாதாரத்தில் உலகில் முதல் நாடாக முன்னிலை பெற வேண்டும்.


Rathna
ஆக 25, 2025 18:29

இதே நாங்க ஆட்சியில் இருந்து இருந்தால் ஒரு வெளி நாட்டு பழைய கப்பலை வாங்கி நல்ல அமௌன்ட் கமிஷன் பார்த்திருப்போம். இதனால் தான் 2014 முன்னால் உள்ள, என்பது எங்கள் ஆசை


Ramesh Sargam
ஆக 25, 2025 17:11

வாழ்த்துக்கள். குறிப்பு: இப்படி சாதனை மேல் சாதனை படைத்தால், எதிர்கட்சியினருக்கு சோதனை மற்றும் வேதனை.


Palanisamy Sekar
ஆக 25, 2025 16:56

சற்றே எண்ணிப்பாருங்கள்...இதே இடத்தில காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருப்பின் இதுபோன்ற நாட்டுக்கு தேவையான பாதுகாப்பினை பற்றி அக்கறை கொள்வார்களா என்ன? ராஹுல் இந்நேரம் தாய்லாந்தில் உல்லாசமாக இருந்திருப்பார். சோனியா காந்தியும் சரி காங்கிரஸ் தலைகளும் சரி செம்மயா சொத்துக்கள் சேர்த்திருப்பார்கள். அறுபதாண்டுகாலம் பொன்னான காலத்தை வீணாக்கிவிட்டோமே. இனியும் காங்கிரசை அடியோடு வீழ்த்தவேண்டுமே தவிர பாஜக போன்ற ஊழலற்ற தேசபக்தியுள்ள கட்சிகளை தொடர்ந்து மிகப்பெரிய அளவுக்கு ஆதரிக்க வேண்டும். செய்தியை படிக்கும்போதே உள்ளம் தித்திக்குது என்ன தவம் செய்தோமோ இப்படிப்பட்ட பிரதமரும் பாஜக கட்சியும் அமைவதற்கு. அணைத்து தேசபக்தி உள்ளங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும், ஜெய் ஹிந்த்


முக்கிய வீடியோ