உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்

வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்

புதுடில்லி: உரிமம் இல்லாமல் வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, 12 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹரி யானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த பர்வீன் சேகல், 37, டில்லியைச் சேர்ந்த முகேஷ் கத்ரேஜா, 48, ஆகிய இருவரும் கம்போடியாவில் இருந்து சிகரெட்டுகளை இறக்குமதி செய்து, டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உ ரிமம் பெறாமல் விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், 25ம் தேதி, பிரஹலாத்பூர் மேம்பாலம் அருகே நான்கு பெரிய பைகளுடன் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 66,000 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கம்போடியாவிலிருந்து சிகரெட்டுகளை இறக்குமதி செய்து உரிமம் பெறாமல் விற்பதை ஒப்புக் கொண்டனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை