உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீனா செல்கிறார் வெளியுறவுத்துறை செயலர்

சீனா செல்கிறார் வெளியுறவுத்துறை செயலர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் 26 மற்றும் 27 தேதிகளில் சீனா செல்ல உள்ளார்.எல்லையில் ரோந்து செல்வது தொடர்பான பிரச்னையில் இந்தியா சீனா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பல மாதங்கள் இரு நாட்டு ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டனர். இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வீரர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டனர். கடந்த ஆண்டு அக்., மாதம் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசியிருந்தார். கடந்த டிச., மாதம் பார்லிமென்டில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது எனக்கூறியிருந்தார்.தொடர்ந்து சமீபத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை, நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசியிருந்தார். இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சீனாவில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, இந்தியா வெளியுறவுத்துறை- சீனா துணை அமைச்சர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல், பொருளாதாரம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பு உள்ளிட்ட இந்தியா சீனா இடையிலான உறவுகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது எனக்கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
ஜன 24, 2025 08:06

சீனாவில் கம்யூனிஸ்ட் அரசியல். தரமற்ற பொருள் உற்பத்தி பொருளாதாரம். இரு நாட்டு மக்கள் உறவு கம்யூனிஸ்ட் அரசியல் தலைவர்களால் சரிவராது. சீனாவிடம் எப்போதும் ஆக்கிரமிப்பு எண்ணம். சீனா பாக் உடன் ஒப்பந்தம் சமநிலையில் இருக்காது. மேலும் வெளியுறவு செயலர் வரும் 26 ம் தேதி குடியரசு தினம். இந்தியாவில் இருக்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வரவேண்டும்.


அப்பாவி
ஜன 24, 2025 07:36

ஒவ்வொருத்தரா போய் ஏசி டீ குடிச்சிட்டு வாங்க.


Kasimani Baskaran
ஜன 24, 2025 05:22

சீனாவால் மொத்த ஆசியாவுக்கும் மிரட்டல். அதை வர்த்தகத்தை மட்டும் வைத்துத்தான் கட்டுப்படுத்த முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை