உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு எல்லையில் பற்றிய காட்டுத் தீ: பலத்த சத்தத்துடன் வெடித்த கண்ணிவெடிகள்

ஜம்மு எல்லையில் பற்றிய காட்டுத் தீ: பலத்த சத்தத்துடன் வெடித்த கண்ணிவெடிகள்

பூஞ்ச்: ஜம்முகாஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காட்டுத்தீ காரணமாக கண்ணிவெடிகள் வெடித்து சிதறின.பூஞ்ச் மாவட்டம் பாலகோட் செக்டரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள காட்டில் திடீரென தீப்பிடித்தது. அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறின. இந்த கண்ணிவெடிகள், பயங்கரவாத ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையாக வைக்கப்பட்டு இருந்தன.6க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. இருப்பினும் இந்த சம்பவத்தில் எவ்வித சேதாரமும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், தீ பல அடி உயரத்திற்கு எரிந்தது. தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலைமை தற்போது சீராக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை