உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் நிகழ்ச்சிக்கு எதிராக கருத்து வனத்துறை அதிகாரி சஸ்பெண்ட்

முதல்வர் நிகழ்ச்சிக்கு எதிராக கருத்து வனத்துறை அதிகாரி சஸ்பெண்ட்

மூணாறு:கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள் புதிய கேரள சங்கமம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சொகுசு பஸ்சில் வலம் வந்ததற்கு எதிராக 'வாட்ஸ் ஆப்' பில் கருத்து பதிவிட்ட வனத்துறை அதிகாரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கேரளாவில் பொதுமக்களை நேரில் சந்தித்து புகார்களை பெறும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள் சொகுசு பஸ்சில் புதிய கேரள சங்கமம் என்ற பெயரில் சட்டசபை தொகுதி வாரியாக வலம் வந்தனர். அதனை காங்கிரஸ் வன்மையாக கண்டித்தது.இந்நிலையில் தேக்கடி வனப்பிரிவில் இடப்பாளையம் வனத்துறை அதிகாரி ஜாகீர் உசேன் ,புதிய கேரள சங்கமத்திற்கு எதிரான கருத்துகளை வனத்துறை சார்பிலான 'வாட்ஸ் ஆப்' குழுவில் பதிவிட்டார். அதனால் ஜாகீர் உசேனை 'சஸ்பெண்ட்' செய்து பெரியாறு ஈஸ்ட் டிவிஷன் உதவி இயக்குனர் பாட்டில் சுயோக்சுபாஷ்ராவ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை