உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி; சூதாட்ட மோசடி வழக்கில் சி.பி.ஐ.,60 இடங்களில் சோதனை

சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி; சூதாட்ட மோசடி வழக்கில் சி.பி.ஐ.,60 இடங்களில் சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: மகாதேவ் சூதாட்ட மோசடி வழக்கில், காங்கிரஸ் பொதுச்செயலாளரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகலின் வீடுகள் உள்ளிட்ட 60 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கரில் 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது முதல்வராக பூபேஷ் பாகல் இருந்தார். அவரது ஆட்சியின் போது, மகாதேவ் சூதாட்ட செயலி வாயிலாக நடந்த மோசடி விவகாரம் அங்கு பெரும் புயலை கிளப்பியது. அதில், அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தொடர்பு உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதில் நடந்த பண மோசடி குறித்து அமலாக்கத்துறை, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். அதிகாரிகளின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகல் மற்றும் அதிகாரிகள் மீதும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கில், இன்று (மார்ச் 26) சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் 10ம் தேதி, இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ரூ.33 லட்சம் கைப்பற்றப்பட்டது. எனது வீட்டில் ரெய்டு மூலம் ரூ. 33 லட்சம் கைப்பற்றப்பட்டது பெரிய விஷயம் அல்ல என்று பூபேஷ் பாகல் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

अप्पावी
மார் 26, 2025 10:14

ஒன்றிய அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாதாம். ஏன்னா சுரிம் கிர்ட் ஆன்லைன் ரம்மி யெல்லாம் திறமைக்கான விளையாட்டுன்னு சொல்லுருச்சாம். அதை வெச்சு ஆன்லைன் ல கோடி கோடியா சம்பாரிக்கறாங்க. இவுரு சம்பாரிச்சா தப்பா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை