உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - ம.ஜ.த.,வினர் ஒற்றுமை முன்னாள் முதல்வர் குமாரசாமி உறுதி

பா.ஜ., - ம.ஜ.த.,வினர் ஒற்றுமை முன்னாள் முதல்வர் குமாரசாமி உறுதி

ஹாசன்: ''நரேந்திர மோடி, மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள், சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக செயல்படுவோம்,'' என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.ஹாசன் மாவட்டம், சென்னங்கிஹள்ளி கிராமத்தில் கெரேகோடியம்மா கோவில் கும்பாபிஷேக விழாவில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்றார்.பின், அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்னையும் இல்லை. ஹாசனில் ம.ஜ.த., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். சிறு, சிறு பிரச்னைகள் உள்ளன. இவை சரி செய்து கொள்ளப்படும்.நரேந்திர மோடி, மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள், சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக செயல்படுவோம்.மாண்டியா மாவட்டத்தில், நிகில் குமாரசாமியை அரசியல் ரீதியாக காலி செய்ய, ஒரு மாதமாக அரசியல் நெடுந்தொடர் நடக்கிறது.முன்னாள் அமைச்சர் ரேவண்ணா அவசர சுபாவம் கொண்டவர். அவரது அவசரத்தால், மக்களின் விரோதத்தை சம்பாதித்து கொள்கிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, முதுகெலும்பாக இருந்து, அரசியலுக்கு வந்தவர் அவர்.எங்கள் குடும்பத்தால், யாருடைய மனமும் புண்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தவறு நடந்திருந்தால், கண்டிப்பாக திருத்தி கொள்கிறோம். தவறை மன்னித்து, வளர்ப்பவர்கள் மக்கள் தான்.கடந்த ஐந்து ஆண்டுகளில், சில சம்பவங்கள் ஹாசனில் நடந்துள்ளது. மற்றவர்களின் துாண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி