உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாஜி முதல்வர் ஷிபு சோரன் காலமானார் ஜனாதிபதி, பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

மாஜி முதல்வர் ஷிபு சோரன் காலமானார் ஜனாதிபதி, பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

புதுடில்லி: ஜார்க்கண்ட் முன்னாள் மு தல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் டில்லியில் நேற்று காலமானார் . அவருக்கு வயது, 81. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தையான ஷிபு சோரன், சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தார். ஜூன் இறுதியில், டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனி ன்றி நேற்று உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகனும், ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் தெரிவித்தார். ஷிபு சோரன் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு நேற்று சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர், ஷிபு சோரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக் கு ஆறுதல் கூறினர். வாழ்க்கை குறிப்பு பீஹாரில் இருந்து ஜார்க்கண்ட் என்ற தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தியவர்களில் மிகவும் முக்கியமானவர் ஷிபு சோரன். இதன்படி, 2000ம் ஆண்டில் தனி மாநிலமாக ஜார்க்கண்ட் உருவானது. பழங்குடி மக்களுக்காக தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வெற்றி கண்ட ஷிபு சோரன், ஜார்க்கண்ட் முதல்வராக மூன்று முறை பதவி வகித்தார். ஆனால், ஒரு முறை கூட ஐந்து ஆண்டுகளை அவர் நிறைவு செய்யவில்லை. மேலும், 2004 - 06 இடைப்பட்ட காலத்தில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். 1980 - 2005 வரை ஆறு முறை லோக்சபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ராஜ்யசபாவுக்கு மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய ஷிபு சோரன், வயது மூப்பு காரணமாக, கடந்த ஏப்ரலில் கட்சியை மகன் ஹேமந்த் சோரனிடம் ஒப்படைத்து, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை