உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொற்கோவிலில் மாஜி துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது துப்பாக்கிச்சூடு!

பொற்கோவிலில் மாஜி துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது துப்பாக்கிச்சூடு!

சண்டிகர்: அமிர்தசரஸ் பொற்கோவிலில் பணியில் இருந்த, பஞ்சாப் மாஜி துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது நரேன் சிங் சவுரா என்பவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பஞ்சாபில் பலமுறை ஆட்சியில் இருந்த அகாலி தளம் கட்சியை சேர்ந்தவர் சுக்பிர் சிங் பாதல், 62. முன்னாள் முதல்வர் மறைந்த பிரகாஷ் சிங் பாதலின் மகனான இவர், பஞ்சாபின் துணை முதல்வராக இருமுறையும், பிரோஸ்புர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். சீக்கிய மதத்தை நிந்தனை செய்த, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவருக்கு, அப்போது துணை முதல்வராக இருந்த சுக்பிர் சிங் பாதல், தன் அதிகாரத்தை பயன்படுத்தி மன்னிப்பு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d2qj35jv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரங்களை சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகாலி தக்த் விசாரித்தது. குற்றங்களை ஒப்புக்கொண்ட சுக்பிர் சிங் பாதல், அகாலி தக்த் முன் கடந்த ஆகஸ்டில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அவருக்கு நேற்று முன்தினம் தண்டனை அளிக்கப்பட்டது. அமிர்தசரஸ் பொற்கோவிலில் சுத்தம் செய்யும் பணியை சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்ட தலைவர்கள் நிறைவேற்றினர். அப்போது, சக்கர நாற்காலியில் வந்த சுக்பிர் சிங், நேற்று தண்டனை விபரங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் அணிந்து, கையில் ஈட்டி ஏந்தியபடி பொற்கோவிலின் வாயிலில் அமர்ந்திருந்தார்.இந்நிலையில், இன்று (டிச.,04) அமிர்தசரஸ் பொற்கோவிலில் பணியில் இருந்த, பஞ்சாப் மாஜி துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது நரேன் சிங் சவுரா என்பவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அருகே இருந்தவர்கள் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்திய நரேன் சிங் சவுராவை மடக்கி பிடித்ததால், குண்டு படாமல் அதிர்ஷ்டவசமாக சுக்பிர் சிங் பாதல் உயிர் தப்பினார். பஞ்சாப் போலீசார் நரேன் சிங் சவுராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.துப்பாக்கிச்சூடு நடத்திய நரேன் சிங் சவுரா காலிஸ்தான் பயங்கரவாதி என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Easwar Kamal
டிச 05, 2024 01:06

இவனுங்க பண்ற அலபரை தாங்க முடியலை. கோவில் என்பது அமைதிக்காக மக்கள் செல்வர். இவனுக கத்தி kabada தூக்கிட்டுதான் கோவில் குள்ளேயே போவணுங்க. கோவில்குல் தன தீவ்ரத கும்பல் உக்கார்ந்து தன குண்டு தயாரிப்பனுவ.


A.SESHAGIRI
டிச 04, 2024 15:03

துப்பாக்கி சூடு நடத்தின தீவிரவாதியின் பெயர் நநேரந்திர சிங் சவுரா.துப்பாக்கி சூட்டில் தப்பியவர் சுக்பீர் சிங் பாதல். இதை மாற்றி கொட்டை எழுத்தில் அந்த தீவிரவாதியின் பெயரை சுக்பீர் சிங் பாதல் என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது


Krishnamurthy Venkatesan
டிச 04, 2024 14:47

துப்பாக்கிச்சூடு நடத்திய சுக்பிர் சிங் பாதல் என்பவர் காலிஸ்தான் பயங்கரவாதி என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது-


ஆரூர் ரங்
டிச 04, 2024 14:12

முகலாயர்களிடமிருந்து ஹிந்துக்களைக் காக்க சீக்கிய பிரிவு துவங்கப்பட்டது . இப்போ அதைத்தான் செய்கிறார்களோ? அல்லது குருநானக் வலியுறுத்தியதுபோல சாதி ஏற்றத்தாழ்வைக் கைவிட்டுவிடவில்லையே. இது போன்று கட்டப்பஞ்சாயத்து செய்ய அரசியல் சட்டத்திலும் இடமில்லை.


Sathyanarayanan Sathyasekaren
டிச 04, 2024 21:26

ஆருர் அவர்களே, நான் எண்ணியதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.


Perumal Pillai
டிச 04, 2024 13:08

நாடகமே உலகம் . இங்கே ஒருவன் தன் சட்டையை தானே கிழித்து கொண்டு நாடகம் நடித்தான். இரண்டும் ஓன்று.


Ramalingam Shanmugam
டிச 04, 2024 13:44

ஹா ஹா


Ramesh Sargam
டிச 04, 2024 12:40

துப்பாக்கி கலாச்சாரம் அமெரிக்காவை அடுத்து இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இது நல்லதுக்கள்ள. இந்திய அரசு இதற்கு ஒரு முடிவு உடனே காண்பது நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை