உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

மஹா., முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மாரடைப்பு காரணமாக இன்று (பிப்.,23) காலமானார். அவருக்கு வயது 86.மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவருமான மனோகர் ஜோஷி கடந்த 21ம் தேதி மாரடைப்பு காரணமாக பி.டி.ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nwiu9fr2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரிக்கப்படாத சிவசேனாவின் மூத்த தலைவராக விளங்கிய மனோகர் ஜோஷி கடந்த 1995 முதல் 1999 வரை மஹாராஷ்டிர முதல்வராக பணியாற்றியுள்ளார். பின்னர் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட அவர், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 2002 முதல் 2004 வரை லோக்சபா சபாநாயகராகவும் இருந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Gurumurthy Kalyanaraman
பிப் 23, 2024 13:39

ஓம் சாந்தி.


Gobalakrishnan s.v
பிப் 23, 2024 13:02

மறைந்த முன்னாள் மகராஷ்ட்ரா முதல்வர் சிறந்த பண்பாளர். வாஜ்பாய் அரசில் லோக்சபா சபாநாயகராகவும் இருந்தவர். நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். நாகரீமான முறையில் நகைச்சுவை உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சபையை கலகலப்புடன் நடத்தி சென்றவர்.அன்னாருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடைவதாக


Narayanan
பிப் 23, 2024 12:44

ஆழ்ந்த இரங்கல்கள் .


Barakat Ali
பிப் 23, 2024 11:54

சிவசேனாவைச் சேர்ந்த இவர் முதல்வராகவும், பாஜகவின் கோபிநாத் முண்டே துணை முதல்வராகவும் இருந்தனர் .....


sankar
பிப் 23, 2024 11:53

நான் மும்பையில் இருக்கும்போது இவரது ஆட்சிதான் நடந்தது - நேர்மையான ஒரு அரசியல்வாதி - பால் தாக்கரேயைப்போல


தமிழ்செல்வன்
பிப் 23, 2024 10:40

ஆழ்ந்த இரங்கல்கள்...


NALAM VIRUMBI
பிப் 23, 2024 09:53

ஓம் சாந்தி


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 23, 2024 09:11

மகாராஷ்ட்ராவில் நேர்மையான அரசியல்வாதி என்று இவரைக் கூறுவார்கள்


SANKAR
பிப் 23, 2024 09:30

so you do not know about ...


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 23, 2024 13:33

உண்மையே. நான் மகாராஷ்டிராவில் சில காலம் இருந்தபோது இவர் நேர்மையான அரசியல்வாதி என்று பலரும் கூறக்கேட்டிருக்கிறேன். அவ்வளவே


Ramesh Sargam
பிப் 23, 2024 08:25

மூத்த அரசியல்வாதி. ஆழ்ந்த இரங்கல்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை