உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெட்ரோ தண்டவாளத்தில் படுத்து மாஜி அதிகாரி தற்கொலை முயற்சி

மெட்ரோ தண்டவாளத்தில் படுத்து மாஜி அதிகாரி தற்கொலை முயற்சி

ஜாலஹள்ளி: மெட்ரோ தண்டவாளத்தில் குதித்து விமானப்படை 'மாஜி' அதிகாரி தற்கொலைக்கு முயற்சித்தார்.உத்தர பிரதேசம், கான்பூரை சேர்ந்தவர் அனில் குமார் பாண்டே, 49. முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரியான இவர், தற்போது பெங்களூரு ஜாலஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.நேற்று காலை 10:00 மணி அளவில், ஜாலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அந்த வேளையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பயணியர் அனைவரும் ரயிலுக்காக காத்திருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக அனில் குமார் பாண்டே தண்டவாளத்தில் குதித்துள்ளார்.இதை பார்த்த பயணியர் பயத்தில் கூச்சலிட்டனர். அவரை எழுந்து வரும்படி கூறியும், அவர் எதையும் காதில் வாங்காமல், தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தார். இதை பார்த்த மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் எமர்ஜென்சி பட்டனை அழுத்தினர்.இதனால் மற்ற மெட்ரோ நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ரயில்கள் ஆங்காங்கே நிறுத்த உஷார்படுத்தப்பட்டது. இதற்கிடையில், மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் தண்டவாளத்தில் இறங்கி அவரை மேலே வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர். தண்டவாளத்தில் குதித்ததால், அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன.இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவத்தால், ஜாலஹள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில், காலை 10:25 முதல் 10:50 மணி வரை மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி