உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏமாற்றுகிறார் யூனுஸ் வறுத்தெடுக்கிறார் மாஜி பிரதமர்

ஏமாற்றுகிறார் யூனுஸ் வறுத்தெடுக்கிறார் மாஜி பிரதமர்

டாக்கா: வங்கதேச இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், அமெரிக்காவின் ஆதரவுடன் தன் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு நாட்டை கொள்ளையடிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாக விமர்சித்துள்ளார். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமராக இருந்தவர் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஹசீனா. அந்நாட்டில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வெடித்த மாணவர் போராட்டம் ஹசீனாவை பதவி விலகச் செய்யும் அளவுக்கு வலுத்தது. அவர் நாட்டை விட்டு தப்பியோடி, நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அங்கு அமைந்தது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா நேற்று கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் உதவியுடனே முகமது யூனுஸ், வங்கதேசம் மீது மாணவர் பெயரில் பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டு, நிதி அளித்து நிறைவேற்றினார். அவர் ஒரு ஏமாற்றுக்காரர்; தன் லட்சியங்களுக்காக நாட்டை அழித்துவிட்டார். இப்போது அவரும், கூட்டாளிகளும் நாட்டைக் கொள்ளையடித்து, அழிவுப்பாதைக்கு இழுத்துச் செல்கின்றனர். ஒரு சட்டபூர்வமான அரசு அமைக்கப் பட்டவுடன் நீதி கேட்டு நாடு திரும்புவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி