UPDATED : நவ 13, 2024 10:30 PM | ADDED : நவ 13, 2024 10:27 PM
துலே: '' முன்னாள் பிரதமர் இந்திரா சொர்கத்தில் இருந்து வந்தாலும், காஷ்மீருக்கு சிறப்பு சட்டம் வழங்கும் 370 வது பிரிவை கொண்டு வர முடியாது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ.,20 ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. துலே பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் சமுதாயத்தினர், காங்கிரஸ் தலைவரை சந்தித்தனர். அப்போது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கூறினர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். ராகுலின் 4 தலைமுறையினர் வந்தாலும், இந்த இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jz0illus&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சொர்க்கத்தில் இருந்து இந்திரா வந்தாலும், காஷ்மீர் சிறப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியாது. மாநில பாஜ., அரசு சத்ரபதி சிவாஜி மற்றும் சவார்க்கரின் கொள்கைகளை பின்பற்றுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.