உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குட்டையில் தவறி விழுந்த நான்கரை வயது சிறுவன் பலி

குட்டையில் தவறி விழுந்த நான்கரை வயது சிறுவன் பலி

பாலக்காடு; பாலக்காடு அருகே, குட்டையில் விழுந்த நான்கரை வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கிழக்கஞ்சேரி வால்க்குளம்பு பகுதி சேர்ந்த ஜோமோன் - -நீது தம்பதியரின், நான்கரை வயது மகன் ஏபல். அருகில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள வயலில், ஏபல் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு தண்ணீர் தேங்கி நின்ற குட்டையில் கால் தவறி விழுந்தார். இதைக் கண்ட நண்பர்கள் கூச்சலிட்டதும், மக்கள் ஓடிவந்து ஏபலை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏபல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வடக்கஞ்சேரி போலீசார், ஏபலின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆலத்தூர் தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி