உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் அதிகாலை பயணத்தால் சோகம்: பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் பலி

ஆந்திராவில் அதிகாலை பயணத்தால் சோகம்: பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் பஸ் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 26) பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை கடந்து எதிர் திசையில் வந்த பஸ் மீது விபத்துக்குள்ளானது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து அதிகாலை நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ