உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசடி செய்த சிற்பி புதுச்சேரியில் கைது

மோசடி செய்த சிற்பி புதுச்சேரியில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பைபரில் சிலை

உடுப்பி: உடுப்பியில் பரசுராமர் பூங்காவில் நிறுவுவதற்கு வெண்கலம் என்று கூறி, பைபரில் பரசுராமர் சிலை செய்து கொடுத்து ஏமாற்றிய சிற்பியை, புதுச்சேரி சென்று, கர்நாடக போலீசார் கைது செய்தனர்.கடந்த பா.ஜ., ஆட்சியில் உடுப்பி மாவட்டம், கார்கலாவில் உள்ள உம்மிகல் மலையில், 2023 ஜனவரியில் பரசுராமர் பூங்கா திறக்கப்பட்டது. இங்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில், 33 அடி உயரம், 15 டன் எடை கொண்ட வெண்கலத்திலான பரசுராமர் சிலை நிறுவப்பட்டது.துவக்கப்பட்ட சில நாட்களிலேயே பராமரிப்புப் பணிக்காக மூடப்பட்டது. இது பல சந்தேகங்களை எழுப்பியது. இதுதொடர்பாக, நல்லுாரை சேர்ந்த கிருஷ்ண ஷெட்டி என்பவர், கார்காலா போலீசில் புகார் செய்தார்.விசாரணையில் அங்கு நிறுவப்பட்டது, வெண்கலத்திலான சிலை அல்ல; பைபரில் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. திடீரென 2023 அக்டோபரில், சிலை இருந்த பகுதியை சுற்றிலும் கருப்பு நிற பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டிருந்தது. இதை கண்டித்து காங்கிரசார், அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.இவ்வழக்கில், சிலை வடிவமைத்த பெங்களூரை சேர்ந்த சிற்பி கிருஷ்ணா நாயக், 45, முன்ஜாமின் கேட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆக., 21ல் மனுவை தள்ளுபடி செய்தது. சிற்பி கிருஷ்ணா நாயக் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.புதுச்சேரியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற கார்கலா போலீசார், சிற்பியை கைது செய்து, கர்நாடகாவுக்கு அழைத்து வந்தனர்.அவரிடம் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

அப்பாவி
நவ 12, 2024 18:33

இந்நிய தேதியில் பரசுராமர் செய்தது ஜாதிவெறிப் படுகொலை. பிராமணர்கள் சாதுக்கள். அடுத்தவனுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள்னு புலம்புறவங்க வரிசையில் வந்து கருத்துப் போடுங்க.


M.s. Rajaram
நவ 12, 2024 15:17

ஒருதேர்ந்த சிற்பி இதுபோல் செய்யமாட்டார. இங்கு பின்புலம் இதை செய்வித்தது. சிற்பியின் பணத்தாசை மோசடி செய்தது. தண்டனை இருவருக்கும் கொடுத்ததுடன் சிலைக்கான செலவையும் திரும்ப பெறணும்


Dharmavaan
நவ 12, 2024 12:33

என்று கோர்ட்டுகள் முறைப்படுத்தப்படுகிறதோ அன்றுதான் நீதி சரியாகும்


Natchimuthu Chithiraisamy
நவ 12, 2024 12:17

தண்டனை எல்லாம் தேவை இல்லை. அந்த நபர் சொத்தை சட்டம் எடுத்து சரியான சிலையை செய்தலே அதை செய்தி யில் போட்டால் குற்றம் குறையும். தண்டனை நீதி என்கிற பெயரில் காலத்தை ஒட்டி காசு பார்த்து விட்டு, சிலைக்கு எந்த விமோசனமும் இல்லாமல் போய்விடும்


Ramu
நவ 12, 2024 09:35

இவனுக்கு புத்தி எங்கே போனது? இது பாவம் என்று ஒரு கலைஞனுக்கு தெரியாதா?


Bhaskaran
நவ 12, 2024 09:27

முதலில் இவன் சொத்துக்களை பறிமுதல் செய்யனும் பத்து வருஷம் ஜெயிலில் போட்டுகல்உடைக்க சொல்லவேண்டும்


Anantharaman Srinivasan
நவ 12, 2024 09:05

அத்தனையும் மீறி இந்தியா 2047 ல் வல்லரசாகப் போகிறதா..??


sundararajan
நவ 12, 2024 08:30

மனுஷன் சாப்பிடும் சொத்துலயே கல்ல கலக்குறாங்க. வாடை அடிக்கிற தரம் குறைந்த ரேஷன் அரிசி தராங்க. அது போல இந்த ஆளும் கட்டிங் கொடுத்து ஆர்டர் வாங்கினா வெண்கலம் வெச்சு கட்டுப்படி ஆகுமா? அதான் இப்படி, சிலை வைப்பதால் எந்த பயனும் இல்லை. சிற்பியிடம் கட்டிங் வாங்கி கொள்ளையடிக்க வெச்சவனை பிடிக்க மாட்டாங்க அவனையும் சேத்து பிடிக்கணும் ...


A P
நவ 12, 2024 08:09

இப்படி தேச துரோகம் செய்யும் கருத்தை இங்கு வைக்க, இவரெல்லாம் ரொம்ப நன்றியுடன் வாலாட்டும் வகை என்று ஏற்றுக்கொள்ளலாம்.


Sriraman Ts
நவ 12, 2024 07:12

வருத்தப்பட வேண்டிய விஷயம். சிரச்சேதமே சரியான தண்டனை


chennai sivakumar
நவ 12, 2024 07:49

தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். நமது நாட்டில் சிரச்சேதம் உடனே என்ற தண்டனை நிறைய குற்றங்களுக்கு அமல் படுத்தினால் மட்டுமே வல்லரசு ஆக முடியும் என்ற நம்பிக்கை வளரும். இல்லாவிட்டால் அது வெறும் தேர்தல் வாக்குறுதி போல ஆகி விடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை