உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை துவக்கம்

ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவில், பெண்களுக்கான இலவச பஸ் சேவை திட்டத்தை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று துவக்கி வைத்தார். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யில் தெலுங்கு தேசம் - பா.ஜ., - ஜனசேனா கூட்டணி ஆட்சி அமைந்து ள்ளது. கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, 'தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், பெண்களுக்கு இலவச பஸ் சேவை அறிமுகப் ப டுத்தப்படும்' என, சந்திர பாபு நாயுடு தெரிவித்திருந்தார். அதன்படி, 'ஸ்தீரி சக்தி' என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பஸ் சேவை திட்டத்தை அமராவதியில் நேற்று அவர் துவக்கி வைத்தார். பின், பெண்களுடன் சேர்ந்து சந்திரபாபு நாயுடு, அவரது மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ், துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பஸ்சில் பயணம் செய்தனர். மாநிலம் முழுதும் வசிக்கும் சிறுமியர், பெண்கள், திருநங்கையர் இந்த திட்டத்தின் வாயிலாக பயனடைய முடியும் என மாநில அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. திருநங்கையர் பயணத்தின் போது, தங்களின் அடையாள அட்டையை காண்பித்தல் அவசியம் என் றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயி லாக மாநிலம் முழுதும் 2.62 கோடி பெண்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு வசம் உள்ள, 11,449 பஸ்களில், 74 சதவீத பஸ்கள் இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்படும் என ஆந்திர போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு 1,942 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kjp
ஆக 16, 2025 09:58

அப்புறம் என்ன ஆந்திரா மாநிலம் தமிழ்நாட்டைப் போல் கடன் அதிகமாக வாங்க ஆரம்பித்து விடும்


அப்பாவி
ஆக 16, 2025 09:27

திராவிட மாடல்டா... ஸ்த்ரி சக்திடா.. பயணம் ஃப்ரீடா..


Rajan A
ஆக 16, 2025 06:19

இப்போது இந்த ஓஷி திராவிட வியாதி பரவி வருகிறது. மக்களின் வரி பணம் இவர்கள் ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்க வீணாக்கப்படுகிறது. இதை ஏன் நீதிமன்றம் அனுமதிக்கிறது?


நிக்கோல்தாம்சன்
ஆக 16, 2025 04:55

இது தேவையா , ? பெண்களின் மருத்துவ செலவுகளை தனியார் , அரசு மருத்துவமனைகளில் இலவசம் என்று மாற்றியமையுங்கள் அ முதல் அஃ வரை என்று நீங்க செய்திருந்தா வாழ்த்தியிருப்பேன்


முக்கிய வீடியோ