உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூணாறில் உறைபனி

மூணாறில் உறைபனி

மூணாறு:மூணாறில் நவ., துவங்கி பிப்.,வரை குளிர்காலம் நீடிக்கும். டிச. இறுதி துவங்கி ஜன.15 வரை காலையில் உறைபனி ஏற்படும். பிப்ரவரியில் குளிர் படிப்படியாக குறைந்து விடும். இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மூணாறு அருகே செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் பிப்.7 காலை ஜீரோ' டிகிரி செல்சியஸ் பதிவானது.அதே பகுதியில் நேற்று காலை வெப்பம் மைனஸ் - 1 டிகிரி செல்சியஸ் பதிவானதால் உறைபனி ஏற்பட்டது. தேவிகுளம், லட்சுமி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 1 டிகிரி, சைலன்ட்வாலி எஸ்டேட்டில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை