உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூதாட்டம் எட்டு பேர் கைது

சூதாட்டம் எட்டு பேர் கைது

நியூ ராஜேந்தர் நகர்,:மத்திய டில்லியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.நியூ ராஜேந்தர் நகரில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குறிப்பிட்ட இடத்தை போலீசார் முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு சூதாட்டம் நடந்ததை உறுதி செய்த போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 51 லட்ச ரூபாயை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய துணை போலீஸ் கமிஷனர் எம் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ