உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காதல் ஜோடியை தேடி வந்து விவசாயியை கொன்ற கும்பல்

காதல் ஜோடியை தேடி வந்து விவசாயியை கொன்ற கும்பல்

பாலக்காடு:-தமிழக - கேரளா எல்லையில், பொள்ளாச்சி அருகே காதல் ஜோடியை தேடி வந்த கும்பல், விவசாயியை அடித்து கொன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மீனாட்சிபுரம் வரவரசள்ளையைச் சேர்ந்தவர் ஞானசக்திவேல், 48; அதே பகுதியில், தென்னந்தோப்பை குத்தகை எடுத்து விவசாயம் செய்கிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி.இந்நிலையில், உமாமகேஸ்வரியின் உறவுக்கார இளைஞரும், அவரது காதலியான பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணும், நேற்று முன்தினம் முதல் மாயமாகினர்.அவர்கள், மீனாட்சிபுரத்தில் உள்ள உமாமகேஸ்வரியின் வீட்டில் தஞ்சமடைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், பொள்ளாச்சியில் இருந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், ஞானசக்திவேலின் வீட்டில் நேற்று முன்தினம் சோதனையிட்டனர்.வீட்டில் காதல் ஜோடி இல்லாததால், ஞானசக்திவேலை சரமாரியாக தாக்கினர். இதில் சோர்வடைந்து மயங்கி விழுந்த அவரை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு கும்பல் தப்பிச் சென்றது. ஞானசக்திவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார். கேரள மாநிலம், மீனாட்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயியை அடித்து கொலை செய்த கும்பலை, தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ