உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஸ் டேங்கர் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

காஸ் டேங்கர் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

ஹாசன் : பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஹாசன், சகலேஸ்புராவில், பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சிராடிகாட் அருகில் நேற்று காலை காஸ் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, சாலையில் கவிழ்ந்தது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு, நேற்று நள்ளிரவு 12:00 மணி வரை தடை விதிக்கப்பட்டது. மாற்றுப் பாதையை பயன்படுத்தும்படி, கலெக்டர் சத்யபாமா உத்தரவிட்டார்.டேங்கர் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். டேங்கரில் இருந்து காஸ் கசிந்ததால், பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ