உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெர்மனி பெண் பலாத்காரம்; டிரைவர் கைது

ஜெர்மனி பெண் பலாத்காரம்; டிரைவர் கைது

ஹைதராபாத்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண், தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாதுக்கு நண்பர் ஒருவரை பார்க்க கடந்த மாதம், 4ம் தேதி, வந்தார். அந்த பெண், அவருடன் வந்த மேலும் சிலரும், ஹைதராபாதைச் சுற்றிப் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் டாக்சியில் சென்றனர். சுற்றி பார்த்து முடிந்ததும், மற்றவர்கள் டாக்சியிலிருந்து இறங்கிச் சென்றனர். அந்த பெண் மட்டும் தனியே டாக்சியில் இருந்தார். தனியே இருந்த அந்த பெண்ணை, டாக்சிக்குள்ளேயே, டிரைவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். பின் தப்பியோடினார். இந்த மோசமான சம்பவம் குறித்து, போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். தப்பியோடிய டாக்சி டிரைவரை போலீசார், கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஏப் 02, 2025 07:26

தெலங்காணாவாச்சே... கொஞ்சமாவது நீதி கிடைக்கும்னு நம்பலாம்.


Appa V
ஏப் 02, 2025 06:28

அரபுநாடுகளில் கை வெட்டுவது போல கில்லியை நறுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை