மேலும் செய்திகள்
'நிகில் கண்ணீருக்கு குமாரசாமி தான் காரணம்'
02-Nov-2024
ராம்நகர் ; ''வாக்காளர்களை கவர, லுாலுா மால் கிப்ட் கூப்கன்களை காங்கிரசார் கொடுத்து வருகின்றனர்,'' என, மத்திய அமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டினார். சென்னப்பட்டணா தொகுதி விரூப்சந்திரா கிராமத்தில், மகன் நிகிலுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் குமாரசாமி பிரசாரம் செய்தார்.அப்போது அவர் அளித்த பேட்டி:ஆளும் மாநில காங்கிரஸ் அரசு, மிகப்பெரிய அளவில் முறைகேடுகளை செய்ய சதி செய்துள்ளது. இதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். ஒட்டுமொத்த சூழலையும் காங்கிரஸ் கெடுத்துவிட்டது.கடந்த சட்டசபை தேர்தலில் கூட, காங்கிரஸ் பெரிய அளவில் முறைகேடுகள் செய்து, மக்களை நம்ப வைத்தது. லுாலுா மால் பல பகுதிகளில் பரிசு கூப்பன்களை வினியோகித்தது.இரவோடு இரவாக கிராமங்களுக்கு சென்ற காங்கிரஸ் தொண்டர்கள், அத்தகைய கூப்பன்களை வினியோகித்தனர். தேர்தல் முடிந்ததும், பணமும் இல்லை; கூப்பனும் இல்லை. மக்கள், காங்கிரஸ் கட்சியை சபித்தனர். இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.
02-Nov-2024