உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பம்; குழந்தை பெற்ற மாணவி மரணம்

வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பம்; குழந்தை பெற்ற மாணவி மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சித்துார்: ஆந்திராவில், 16 வயது பள்ளி மாணவி கர்ப்பிணியாகி, குழந்தை பெற்றபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவின் சித்துாரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த, 16 வயது மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்; இது, அவரது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. தங்கள் மகள் எடை அதிகரித்து குண்டாக இருப்பதாக பெற்றோர் நினைத்தனர். பள்ளியில் மாணவியின் நடவடிக்கைகளை கவனித்த ஆசிரியர்கள், சந்தேகமடைந்து பெற்றோரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர், சித்துார் அரசு மருத்துவமனையில் மாணவியை பரிசோதனைக்காக அனுமதித்தபோது, நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. அறுவை சிகிச்சை வாயிலாக மாணவிக்கு குழந்தை பிறந்தது. மாணவியின் உடல்நிலை மோசமானதால், உடனடியாக திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்; அங்கு, மாணவி உயிரிழந்தார். அடுத்தடுத்த அதிர்ச்சியால் நிலை குலைந்து போன, மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் நிலைமைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 11:13

பெற்றோர்களுக்கு நிறை மாதம் ஆகும் வரை தெரியலையா? எங்க பாட்டி, பார்த்ததுமே,ஏண்டி உண்டாயிருக்கியா, கண்ணு சோர்வா இருக்கு " என்று இரண்டாம் அல்லது மூன்றாம் மாதமே கண்டுபுடிச்சுருவா. இத்தனை க்கும் பாட்டி அந்த கால 10 ஆம் க்ளாஸ் தான். 9 பிள்ளைகள்.


ஈஸ்வர்
பிப் 18, 2025 10:57

பெற்றோர்களுக்கே தெரியாமலா. தத்திகள் நாட்டில் அதிகமாயிட்டாங்க.


D.Ambujavalli
பிப் 18, 2025 05:53

தாய்மார்கள் அந்தக்காலத்தில் மகளின் ‘விலக்கு’ நாட்களைக் கவனமாக கணக்கிட்டு, போஷாக்கு குறைபாடு போன்ற காரணங்களால் தாமதமானால் தக்க வைத்தியம் செய்ய முனைவர். மகள் நிறைமாத கர்ப்பமாக இருப்பது எப்படி பெற்றவர்கள் கவனிக்காமல் இருக்கிறார்களோ என்று வியப்பாகவே உள்ளது. சமீபத்தில் பள்ளியின் கழிப்பறையிலேயே பிரசவித்த நிகழ்வை பார்க்கும்போது, பெற்றோரும், பிள்ளைகளும் தனித்தனித் தீவுகளாகவே வாழ்கிறார்களோ என்ற சந்தேகமே எழுகிறது


balasubramani
பிப் 18, 2025 06:45

please don't keep such a un trustable news


Keshavan.J
பிப் 18, 2025 09:58

balasubramani it is not un trus information, Those days mothers keenly follow daughters monthly periods. 16 year old girl knows what is sex and becoming pregnant. This has happened to her close contacts. The police should do DNA and find the culprit and give severe punishment


புதிய வீடியோ