உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வதேச புக் ஆப் ரிக்கார்டு விருது பெற்ற சிறுமி

சர்வதேச புக் ஆப் ரிக்கார்டு விருது பெற்ற சிறுமி

மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவை சேர்ந்த, அங்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தேஜஸ்வி - ரம்யா தம்பதியின் மகள் வித்திகா, 5. சிறு வயதில் இருந்தே பெற்றோர், பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து பல்வேறு திறமைகளை கற்றுக்கொண்டு உள்ளார். சர்க்கஸ்களில் ரிங் அணிந்து சுற்றுவது போல, கழுத்தில் ரிங்க் களை வைத்துக்கொண்டு 10 -- 15 நிமிடங்கள் விடாமல் சுற்றுகிறார். 118 பொருட்களின் பெயர்களை பார்க்காமலேயே கூறுகிறார். எந்த கேள்வி கேட்டாலும் 'டக்' 'டக்' என்று பதில் சொல்கிறார். பார்க்காமலேயே காய்கறிகள், பழங்கள், தியாகிகள், வாகனங்களின் பெயர்கள், நட்சத்திரங்கள், பறவைகள், விலங்குகளின் பெயர்களை 'மடமட' என கூறுகிறார்.இது மட்டுமின்றி பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ர நாமம் சுலோகங்களை பக்தியுடன் உச்சரிக்கிறார். சிறுமியின் திறமை, புத்திசாலித்தனம், ஞாபக சக்தி ஆகியவை குறித்து, 'சர்வதேச புக் ஆப் ரிக்கார்டு' சாதனை மையத்திற்கு அனுப்பி இருந்தனர். ஞாபக சக்தி விஷயத்தில், 'இந்தியா புக் ஆப் ரிக்கார்டு' விருது பெற்றார். அதன் பின், சிறுமியின் திறமையை பாராட்டி, 'சர்வதேச புக் ஆப் ரிக்கார்டு விருது'க்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக, அவரது பெற்றோர் கூறுகின்றனர்.படிப்பிலும் சுட்டிசிறுமிக்கு 3 வயது 2 மாதம் இருந்த போதே, அதிக ஞாபக சக்தி இருந்தது. நாங்கள் என்ன சொன்னாலும் அப்படியே மனதில் பதிய வைத்து கொள்வாள். எத்தனை நாட்கள் கழித்தாலும், எந்த விதத்தில் கேட்டாலும் தெளிவாக கூறுவார். படிப்பிலும் நல்ல மாதிரியாக திகழ்ந்தார். நல்ல முறையில் வளர்ந்து சிறிய வயதிலேயே சாதனை படைத்துள்ளார்.---- தேஜஸ்வி - ரம்யா, சிறுமியின் பெற்றோர்.கழுத்தில் ரிங் வளையத்தை வைத்து சுற்றிய சிறுமி வித்திகா - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !