உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து துறையிலும் சீர்திருத்தம்; பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறையிலும் சீர்திருத்தம்; பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: நாட்டில் அனைத்து துறையிலும் சீர்திருத்தம், மாற்றம் நடந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று உலகில் உள்ள ஒவ்வொரு நிபுணரும், ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்தியாவின் வளர்ச்சியை நினைத்து பெருமை அடைகின்றனர். அனைத்து துறையிலும் சீர்திருத்தம், மாற்றம் நடந்துள்ளது. ஜனநாயகம், மக்கள்தொகை ஆகியவற்றின் உண்மையான சக்தியை உலகுக்கு இந்தியா எடுத்துரைக்கிறது. வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பா.ஜ., அரசு செயல்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hdt74c4r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

5வது இடம்

இந்தியா 11வது பெரிய பொருளாதாரமாக மாற 7 தசாப்தங்கள் ஆனது, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசு நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டிற்கும் பா.ஜ., அரசு முன்னுரிமை அளிக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியின் போது மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. பா.ஜ., ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ராஜஸ்தான் இதன் மூலம் நிறைய நன்மைகளைப் பெறுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sampath Kumar
டிச 17, 2024 14:37

எல்லா துறையிலும் முன்னேரேற்றம் பீத்திக்க வேண்டியதுதான்


அப்பாவி
டிச 09, 2024 20:28

கொஞ்சம் முதலைப் போடு. மார்க்கெட்டை உசுப்பேத்து. சில்கறை இன்வெஸ்டர்கள் பணத்தைப் போட்டவுடன் எவனாவது ஹிண்டன்பர்க், அதானி ரிப்போர்ட்னு லீக் செஞ்சு எல்லாப்பங்கையும் வித்து லாபம் பாப்பாய்ங்க. இதுக்கெல்லாம் ஏத்த மாதிரி சீர்திருத்தங்கள் நிறைய வந்திருக்கு. ஆனா சாதாரண மனிதனை டார்ச்சர் பண்ணி பணத்தயும் புடுங்கிக்கற மாதிரி IEPF போன்ற அமைப்புகள் வந்திருப்பதுதான் பரிதாபம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 09, 2024 16:19

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது ..... அதான் எங்களுக்கும் எரிச்சலா இருக்கு .... தில்லி குடும்பம் அவங்களால முடிஞ்ச அளவுக்கு சீனாவோட, அமெரிக்காவோட கைகோர்த்து, காலுகோர்த்து தடுத்துக்கிட்டுதான் இருக்காங்க .... எங்க பங்குக்கு தங்குசுதன் திட்டத்தை நாங்களும் தடுத்துட்டோம் .... எதுன்னாலும் எங்க கிட்டயே இன்னும் பல தலைமுறைகளுக்கு கையேந்துற மாதிரி தமிழனை ஆக்கிட்டோம் .... குடும்ப மாப்பிள்ளையை மட்டும் கவனிச்சுக்குங்க .... கைவுட்றாதீங்க ....


புதிய வீடியோ