உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபத்துக்கள் தெரிந்திருந்தும் கோவா விடுதியில் பட்டாசு வெடிக்க அனுமதி; உரிமையாளர்களுக்கு 5 நாள் போலீஸ் காவல்

ஆபத்துக்கள் தெரிந்திருந்தும் கோவா விடுதியில் பட்டாசு வெடிக்க அனுமதி; உரிமையாளர்களுக்கு 5 நாள் போலீஸ் காவல்

பனாஜி: கோவா இரவு விடுதி தீ விபத்து வழக்கில் உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா மற்றும் சவுரவ் லுாத்ராவை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவாவின் பாகா கடற்கரை அருகே உள்ள, 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற இரவு விடுதியில் டிசம்பர் 7ம் தேதி அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குப் பொறுப்பான விடுதி உரிமையாளர்களான கவுரவ் லுாத்ரா மற்றும் சவுரவ் லுாத்ரா சகோதரர்கள், சம்பவத்துக்குப் பின் டில்லியில் இருந்து தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தப்பிச் சென்றனர். மத்திய அரசு அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்கியதால், தாய்லாந்து போலீசார் டிசம்பர் 11ம் தேதி அவர்களை கைது செய்தனர்.'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் உதவியுடன் கவுரவ் மற்றும் சவுரவ் லுாத்ரா நேற்று தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் கோவா அழைத்து சென்று விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 17) கோவா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப் பட்டனர். அவர்களுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்த பிறகு, இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, ஆபத்துக்கள் தெரிந்திருந்தும் விடுதியில் இரவு நேரத்தில் பட்டாசு வெடிக்க உரிமையாளர்கள் அனுமதி அளித்துள்ளனர் என போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா மற்றும் சவுரவ் லுாத்ராவை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ