உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுத்தை தாக்கி ஆடு காயம்

சிறுத்தை தாக்கி ஆடு காயம்

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு, ஒலவக்கோடு அருகே உள்ள தோணி பகுதி, வன எல்லையோரம் உள்ளது. இப்பகுதியில், நேற்று அதிகாலை வனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, அப்பகுதியைச் சேர்ந்த சுதாவுக்கு சொந்தமான ஆடு ஒன்றை தாக்கியது.இதில், கழுத்துப் பகுதியில் காயமடைந்ததும், ஆட்டின் சப்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த சுதா, கதவை திறந்ததும் சிறுத்தை அங்கிருந்து, வனப்பகுதிக்குள் ஓடியது.தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இரு நாட்களுக்கு முன், தோணி மாயாபுரம் பகுதியிலும் கோழி மற்றும் நாயை சிறுத்தை தாக்கி கொன்று உணவாக்கியுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி