உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தால் இதுதான் கதி; ஆம்ஆத்மி தோல்வி குறித்து ஸ்வாதி மலிவால் கருத்து

பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தால் இதுதான் கதி; ஆம்ஆத்மி தோல்வி குறித்து ஸ்வாதி மலிவால் கருத்து

புதுடில்லி: பெண்களுக்கு எதிராக தீங்கு செய்தவர்களுக்கு (ஆம்ஆத்மி) கடவுள் சரியான தண்டனை கொடுத்துள்ளதாக ராஜ்சபா எம்.பி., ஸ்வாதி மலிவால் தெரிவித்துள்ளார்.70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிஷோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். அதேபோல, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=365s5xwe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=027 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்கிறது. மக்களின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டில்லி சட்டசபை வெற்றியை பா.ஜ.,வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்ட ஆம்ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சுவாதி மலிவால், ஆம்ஆத்மி தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். முன்பு திரவுபதி படத்தை பகிர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ' நாம் வரலாற்றை கொஞ்சம் பார்க்க வேண்டும். பெண்களுக்கு எதிராக குற்றம்புரிந்தவர்களுக்கு கடவுள் சரியான தண்டனை கொடுப்பார். அதுதான் தற்போதைய தேர்தலில் நடந்துள்ளது. பொய் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம் தான் ஆம்ஆத்மிக்கு இருக்கிறது. குடிநீர், காற்று மாசுபாடு, மோசமான உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்டவை தான் ஆம்ஆத்மியின் தோல்விக்கு காரணமாகும். தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு வாழ்த்துக்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்,' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mahalingam
பிப் 09, 2025 10:41

ஆனால் திருடனைத்தான் நாங்கள் தேர்ந்தெடுப்போம் அது எங்களது கொத்து சாரி பிறப்புரிமை என்பவர்களிடம் வாதம் செய்ய முடியாது


Ethiraj
பிப் 08, 2025 21:01

This applies to TN also. Seeman handling vijayalakshmi led to his failure


Karthikeyan Palanisamy
பிப் 08, 2025 20:46

வாய்ப்பில்ல ராஜா


Ram
பிப் 08, 2025 19:57

ஆம் ஆத்மீக்கு சரியான செருப்படி , தமிழ்நாட்டிலும் ஸ்டாலினுக்கும்,அவரது குடும்பத்துக்கும் அதையே கொடுக்கணும்


Senthoora
பிப் 08, 2025 19:05

சரி, இனி டில்லியில் பெண்களுக்கு எதிராக தீங்கு, பாலியல் கொடுமை இல்லாமல் போகுதா என்று பார்க்கலாம், அப்படி நடந்தால் இராஜினாமா செய்ய தயாரா? யார்வந்தாலும் , திருடன் திருடனாய் பார்த்து திருந்தானும், இது பட்டுக்கோட்டையார் சொன்னது.


subramanian
பிப் 09, 2025 12:29

நீ ஒரு இழிபிறவி


Sankar Ramu
பிப் 08, 2025 17:56

தமிழ்நாட்டு மக்கள் எப்போது திருந்துவார்களோ


ஆரூர் ரங்
பிப் 08, 2025 17:06

கரடியே காறித் துப்பிடுச்சு.


சமீபத்திய செய்தி